அத்துமீறும் பாகிஸ்தான்.. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் உச்சக்கட்ட உஷார் நிலை
காஷ்மீர்: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள அவர்களது முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

போர் பதற்றத்தை தூண்டும் பாகிஸ்தான்
இந்த நிலையில் பாகிஸ்தான் அத்துமீறி போர் பதற்றத்தை தூண்டி வருகிறது. இந்த நிலையில் தான் ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பஞ்சாபில் குருதாஸ்பூர் மாட்டத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கி, அதிகாலை 5 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு விளக்குகள் அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று இரவு திடீரென பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறின.
3 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்த விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் உள்ளிட்ட 3 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பதன்கோட் ராணுவ தளத்தில் இருந்த விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.
ராஜஸ்தன் எல்லை பகுதியிலும் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications