Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிக்கரணை ஆணவக் கொலை! தாலியின் ஈரம் கூட காயலை! கணவரின் சட்டையை அணிந்து மனைவி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய மனைவி தனது கணவரின் சட்டையை அணிந்து கொண்டு கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (26). இவரும் ஜல்லடியன்பேட்டை சாய் கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

Pallikaranai honour killing: Wife explains about the incident

சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஷர்மிக்கு அவருடைய பெற்றோர் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது ஷர்மி எவ்வளவு சொல்லியும் பிரவீனுக்கு திருமணம் செய்து கொடுக்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் இனியும் இவர்கள் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த ஷர்மி பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பிரவீன் குடும்பத்தினரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். தங்கள் பேச்சை மீறி ஜாதி விட்டு ஜாதியில் ஒரு பையனை திருமணம் செய்து கொண்டாரே என ஷர்மி மீதும் பிரவீன் மீது ஷர்மி குடும்பத்தினர் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.

அவ்வப்போது ஷர்மியின் அண்ணன் தினேஷும் அவருடைய நண்பர்களும் ஷர்மியிடம் "நீ எப்படி பிரவீன் கூட வாழுறேனு பார்க்கிறோம்" என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரவீனை ஷர்மியின் அண்ணனும் அவரது நண்பர்களும் கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதையடுத்து இரு நாட்களாக நோட்டமிட்டவர்கள், பிரவீன் நேற்று இரவு பள்ளிக்கரணை டாஸ்மாக் கடைக்கு வருவதை பார்த்தனர்.

அப்போது டாஸ்மாக் கடைக்கு வெளியே வந்த பிரவீனை தினேஷ் உள்ளிட்ட அவருடைய நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரவீனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்தனர். இதில் தினேஷ், ஸ்டீபன், விஷ்ணு, ஜோதி லிங்கம், ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்தனர்.

ஆணவ படுகொலை செய்யப்பட்ட பிரவீன் வீட்டிற்கும் பெண் வீட்டாருக்கும் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஷர்மி செய்தியாளர்களிடம் கூறுகையில் நாங்கள் 7 வருடங்களாக காதலித்தோம். பெற்றோரிடம் கேட்டோம். ஆனால் மறுத்துவிட்டார்கள்.

அதனால் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம். என் வாழ்க்கையில் தலையிடுவதற்கு என் அண்ணன் யாரு, வெட்டிடுவேன், கொண்ணுடுவேன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க, அதே மாதிரி பண்ணிட்டாங்க. சாப்பாடு வாங்க போன பிரவீன் வீட்டுக்கு வரவே இல்லை என கூறிய ஷர்மி, தனது கணவரின் சட்டையை அணிந்து கொண்டு கதறி அழுதார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+