Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்ருட்டியாரை வைத்து விஜய் மாஸ்டர் கணக்கு! சீனியர்களின் கூடாரமாகும் தவெக! திணறும் திராவிட கட்சிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் இப்போது நடந்து வரும் மாற்றங்கள், கட்சிகளுக்குள் மட்டும் இல்லாமல், பல வருடங்களாக மக்கள் மனதில் உருவான அரசியல் அடையாளங்களையே மாற்றும் அளவுக்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன... இப்படிப்பட்ட மாற்றங்களுக்கிடையே, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் அரசியல் லைம்லைட்டுக்குள் இன்று வந்துள்ளார்... என்ன காரணம்? சற்று விரிவாக பார்ப்போம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மிக சிறந்த அரசியல் ஆசானாக இருந்தவர் பண்ருட்டி.. அன்றைய கால அரசியலில், பண்ருட்டியார் டெல்லி செல்கிறார் என்றாலே, தமிழக அரசியல் களமே கதிகலங்குமாம்.. அந்த அளவுக்கு சட்டநுணுக்கங்கள் முதல் அரசியல் அத்துப்படி தெரிந்தவர்தான் பண்ருட்டியார்..

எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆசான்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஒரு கடுமையான அதிகாரப் போட்டி, உள்பிரிவுகள், மற்றும் அடையாள குழப்பங்களை சந்தித்தது. அந்த காலகட்டத்தில், ஓபிஎஸ் அரசியல் ரீதியாக நிலைநிறுத்தப்படுவதற்கு பின்னணியில் செயல்பட்ட முக்கிய ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார் என்பதை இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..

அதனால்தான், உங்களை போன்றோர் எங்களுடன் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா இருவருமே வேண்டி விரும்பி கேட்டுக் பண்ருட்டியாரை தங்கள் பக்கம் அழைத்து சென்றனர்.. பண்ருட்டியாரின் அரசியல் அனுபவம், சட்ட அறிவு, மற்றும் தேர்தல் வியூகங்களை ஒருங்கிணைக்கும் திறன் போன்றைவ அனைத்தும் ஓபிஎஸ்ஸுக்கு துணையாய் நின்றன..

பண்ருட்டியார் சீனியர்

அமைதியான செயல்பாடு, திரைமறைவு வியூகங்கள், மற்றும் நேரத்தை காத்திருக்கும் அரசியல் பாணி கொண்டவர் என்ற பெயரை பெற்ற பண்ருட்டியார், இப்போது நேரடியாக அரசியல் மேடையில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளத் தயாராகியுள்ளார். இதற்கு காரணம் ஓபிஎஸ்தான் என்பதை அவரது ஆதரவாளர்களே மறுக்கவில்லை..

2024 லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்ததில் இருந்தே, தன்னுடைய அணியின் அடையாளத்தை ஓபிஎஸ் இழந்துவிட்டதாக விமர்சனங்கள் கிளம்பின.. இறுதியில் ஒவ்வொருவராக ஓபிஎஸ்ஸிடமிருந்து பிற கட்சிகளுக்கு தாவி கொண்டிருக்கிறார்கள்..

எம்ஜிஆர் - அதிமுக

இந்த சூழலில், அரசியல் ஆலோசகராக மட்டுமே இருப்பது தன்னுடைய அனுபவத்துக்கும் அரசியல் பார்வைக்கும் பொருந்தாது என்ற உணர்வு பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உருவாகியிருப்பதாக தெரிகிறது.. முடிவெடுக்கும் இடங்களில் தன்னுடைய கருத்துகள் முழுமையாக பிரதிபலிக்காத நிலை, எதிர்கால அரசியல் பயணம் குறித்து தெளிவில்லாத சூழல் பண்ருட்டியாரையும் இப்போது ஓபிஎஸ் அணியிலிருந்து விலகத் தூண்டியிருப்பதாகவே தெரிகிறது..

பண்ருட்டி ராமச்சந்திரன் “எம்.ஜி.ஆர் – அ.தி.மு.க.” என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இது உண்மையா தெரியவில்லை.. ஒருவேளை உண்மையாயின் சில அரசியல் கணக்குகளை இங்கே பார்ப்போம்..

முதலில், எம்ஜிஆர் என்ற பெயரை மீண்டும் அரசியல் மேடையில் பண்ருட்டியார் முன்வைப்பது, தற்போதைய அதிமுக தலைமையின்மீது மறைமுகமான விமர்சனமாகவும் பார்க்கப்படுகிறது.

எம்ஜிஆரின் பெயரும், பழைய அதிமுக மரபும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் துவக்கி இருக்கலாம் என்று தெரிகிறது..

தவெகவுடன் கூட்டணி?

ஆனால் அதேசமயம், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் உள்ள நிலையில், பண்ருட்டியாரின் இந்த அணுகுமுறையானது, தவெகவுக்கு கூடுதல் பலத்தை தரும் என்று நம்பப்படுகிறது..

பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர், தவெகவுக்கு அரசியல் ரீதியான முதிர்ச்சியையும், தேர்தல் வியூகங்களையும் வழங்கக்கூடியவர் என்பதை மறுக்க முடியாது..

தன்னுடைய ஒவ்வொரு மேடையிலும் எம்ஜிஆர் பற்றின பேச்சை விடாமல் விஜய் பேசுகிறார் என்றாலும், எம்.ஜி.ஆர் – அ.தி.மு.க என்ற பெயரில் கூட்டணி வைப்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் + அதிமுகவின் அதிருப்தி தொண்டர்களையும் இழுக்க முடியும்.. அதாவது பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பாத பாரம்பரிய ரத்தத்தின் ரத்தங்கள் பண்ருட்டி - விஜய் பக்கம் வர வாய்ப்புள்ளது... இது அதிமுகவுக்கு பெருத்த பாரம்பரிய வாக்குகளை சிதறடிக்கக்கூடும்.. பழைய அதிமுக தொண்டர்களும் பண்ருட்டியை நாடி வரலாம்..

வன்னியர் வாக்குகள் தவெகவுக்கு?

அதுமட்டுமல்ல, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களுக்கு முக்கிய பதவி தருவதன் மூலம், வன்னியர்களை சமாளிக்கவும், வன்னியர்களின் ஆதரவை தவெகவால் எளிதாக பெற முடியும்..

அன்று பண்ருட்டியார் விஜயகாந்த்திடம் இருந்தவரை தேமுதிக என்ற கட்சி கம்பீரமாக காட்சி தந்தது.. பண்ருட்டியாரை விலக்கியதுமே, அந்த கட்சி கரைந்து காணாமல் போய்விட்டது என்பது தமிழகம் அறிந்த உண்மை.. தற்போது புதிய கட்சியை துவங்கி, விஜயுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில், பண்ருட்டியாரின் அறிவும் + அனுபவமும் தவெகவுக்கு கண்டிப்பாக வழிகாட்டக்கூடும் என்றே மதிப்பிடப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+