பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் தரும் அரசாணை.. ஐகோர்டில் முக்கிய வாதம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த அரசாணை சட்டப்படி செல்லாது. மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் வழங்க முடியாது என்று வாதிட்டார். இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்களம் கிராமத்தில் எனக்கு 169 சென்ட் நிலம் உள்ளது.

காஞ்சிபுரம்
அதில் என்னுடைய நிலத்தை கையகப்படுத்துவதாக விளக்க நோட்டீசை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி எனக்கு அனுப்பி உள்ளார்கள். நிலத்தை கையகப்படுத்துவதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தும், அதை அவர் நிராகரித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
கலெக்டருக்கு அதிகாரம்
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராஜசேகர், "நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சிறப்பு வருவாய் அதிகாரி நோட்டீஸ் வழங்க அதிகாரமே கிடையாது. கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அந்த அதிகாரம் மாவட்ட கலெக்டருக்குதான் உள்ளது" என்று வாதிட்டார்.
வருவாய் அதிகாரிக்கு அதிகாரம்
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் சதீஷ் பெருமாள், காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு இந்த அதிகாரத்தை வழங்கி 2021-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையை தாக்கல் செய்திருந்தார். அந்த அரசாணையில், நிலத்தை கையகப்படுத்த சிறப்பு வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
வழக்கு தொடர அனுமதி
உடனே மனுதாரர் தரப்பு வக்கீல், "இந்த அரசாணையிலும் விதிமீறல் உள்ளதால், இதை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் , 2021-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதித்து விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
அரசாணை செல்லாது
அதன்படி, 2021-ம் ஆண்டு அரசாணையை ரத்து செய்ய கோரி ஸ்ரீபெரும்புதூர் சிவலிங்கம் புதிய வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராஜசேகர் ஆஜராகி, "இந்த அரசாணை சட்டப்படி செல்லாது.
அதிகாரம் இல்லை
மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் வழங்க முடியாது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார். தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்புக்கு அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற ஏப்ரல் 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications