சத்யா கொலை.. அப்பா தற்கொலை..குற்றவாளியை ரயில் முன்பு தள்ளி கொல்லுங்கள்.. விஜய் ஆண்டனி ஆவேசம்
சென்னை: சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கோரிக்கை விடுத்துள்ளார்
பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவி சதீஷ் என்ற இளைஞரால் ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்யப்பட்டார்.
சத்யா தனியார் கல்லூரியில் பி காம் படித்து வந்த நிலையில், அவரை சதீஷ் ஒரு தலையாக காதலித்து உள்ளார். இவர்கள் இருவரும் போலீஸ் குடியிருப்பில்தான் வசித்து வந்துள்ளனர். சத்யாவின் அப்பா மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். சதீஷின் அப்பா தயாளன் முன்னாள் எஸ்.ஐ.

காதல்
போலீஸ் குடியிருப்பில் சத்யாவை பார்த்த சதீஷ் பல வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார். சத்யா செல்லும் வழியில் எல்லாம் சதீஷ் சென்று, அவரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். குடியிருப்பில் அடிக்கடி பார்த்து காதலை சொல்லி இருக்கிறார். கல்லூரிக்கு தனியாக செல்லும் போது, திரும்பி வரும் போதெல்லாம் காதலை சொல்லி இருக்கிறார். இந்த ஒருதலைக் காதல் காரணமாக மது உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்திற்கு சதீஷ் ஆளாகி இருக்கிறார்.

ரயிலில் தள்ளி விட்டு கொலை
சதீஷ் பெரிதாக படிப்பு மீது ஆர்வம் காட்டாமல், ரவுடித்தனமாக சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில்தான் சத்யா காதலை ஏற்றுக்கொள்ளாத கோபத்தில் நேற்று சதீஷ் அவரை கொலை செய்தார். பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயிலுக்காக சத்யா காத்திருந்த போது, சதீஷ் அவரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதில் உடல் இரண்டாகி சத்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

சத்யாவின் தந்தை மரணம்
சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தொடர் தேடுதலுக்கு போன் நேற்று இரவு சதீஷ் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சத்யாவின் தந்தை மாணிக்கம் திடீரென இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு காரணமாக பலியானதாக கூறப்பட்டது.

விஷம் குடித்து தற்கொலை
பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டு பேரின் உடலும் ஒன்றாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் இரண்டு பேரின் உடலும் அருகருகே வைக்கப்பட்டு இருந்தது. உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

வீட்டில் குவிந்த உறவினர்கள்
பிரேத பரிசோதனைக்குப் பிறகு இருவரின் உடலும் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சூழ்ந்திருந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் கண்ணீர் விட்டு அழுதனர். ஒரே நாளில் கணவரையும் மகளையும் பறிகொடுத்த வேதனையில் அலறி துடித்தார் சத்யாவின் அம்மா. அது காண்பவர்கள் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது.

விஜய் ஆண்டனி
இந்த கொலை சம்பவமும் தற்கொலை சம்பவமும் பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளிக்கு உடனே தண்டனை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications