நாம் அடுத்த கட்டம் போக பரந்தூர் விமான நிலையம் அவசியம்.. காலத்தின் கட்டாயம்: தங்கம் தென்னரசு உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசும் நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையும் இணைந்து பசுமை விமான நிலையம் மற்றும் தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கு தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு

ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், திமுக ஆட்சி அமைந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், இதுவரை 2.5 லட்சம் கோடிக்கும் மேலான புதிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவிலேயே தமிழகம் தான் சிறந்த தொழில் துறை மாநிலமாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடம் அறிவுறுத்தியுள்ளார்.

பரந்தூர் தேர்வு ஏன்?

பரந்தூர் தேர்வு ஏன்?

இந்த தொழில் துறைக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்த சென்னையில் புதிய விமானம் தேவை என்ற தொலை நோக்கு முடிவை முதலமைச்சர் எடுத்துள்ளார். இதன்மூலம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைய முடியும். புதிய விமான நிலையத்திற்காக சென்னையை சுற்றி 11 சாதகமான இடங்கள் பார்வையிடப்பட்டது. அதில் பல இடங்கள் சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டது. இவை எல்லாம் ஆலோசிக்கப்பட்ட பின்னரே இறுதியாக பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது.

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம். இந்த விமான நிலையம் வந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும். பரந்தூர் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் விரும்புகிறார். அதன் காரணமாக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. எனவே,ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மைல் கல்லாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 விமான நிலையம் விரிவாக்கம்

விமான நிலையம் விரிவாக்கம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக இதவரை 80 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை மட்டுமைன்றி திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களிலும் விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவிருக்கிறது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+