பிரதமரை வரவேற்க குவிந்த பாஜகவினர்.. அனுமதி மறுப்பு.. போலீசாருடன் வாக்குவாதம்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இன்று போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமரை வரவேற்க ஏராளமான பாஜகவினர் குவிந்த நிலையில் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெறவுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டன.

Party members gathered to welcome the Prime Minister; Refusal of permission to control crowd

இதனையடுத்து இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துவக்கவிழாவில் பிரதமர் இந்தப் போட்டிகளை துவக்கிவைக்கவுள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோர் இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அடையார் ஐஎன்எஸ் தளத்திலிருந்து சாலை மார்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சென்று விழாவை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமரை வரவேற்க ஏராளமான பாஜவினர் அப்பகுதியில் குவிந்துள்ளனர். ஆனால் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களையும் உள்ளே அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே பிரதமர் மோடியின் படம் இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் குறித்து விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் பாஜகவினர் மோடியின் படத்தை ஏற்கெனவே ஒட்டியிருந்த பேனரில் கொண்டு ஒட்டினர். இது பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூடுதலாக பாஜகவினரை பங்கேற்க அனுமதிக்காதது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+