"பருத்தி வீரன்" முத்தழகிக்கு நடந்ததை விட பெரிய வன்முறை.. அமீருக்கு ஆதரவாக இறங்கிய நந்தா பெரியசாமி
சென்னை: பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம் இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல.. என்று இயக்குனர் நந்தா பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அந்த படத்தின் இயக்குனர் அமீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அமீர் அதிக செலவு செய்தார், படத்தின் காசை திருடினார். அது எனக்கு முதல் படம். ஆனால் நான் கொடுத்த காசை வைத்து படத்தை எடுக்காமல் பணத்தை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு வைத்தார். ஞானவேல் ராஜாவின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்து இருந்தார். அமீருக்கு ஆதரவாக இயக்குனரும் நடிகருமான சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன் என பலரும் கருத்து தெரிவித்தனர். ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனாலும் இதை ஏற்க முடியாது என சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கடுமையாக சாடி பதில் அறிக்கை வெளியிட்டனர்.
நந்தா பெரியசாமி: எந்த பொதுவெளியில் அமர்ந்து அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ.. அதே பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்..! என்று சமுத்திரக்கனி ஞானவேல் ராஜாவை காட்டமாக விமர்சித்தார். இந்த நிலையில், அமீருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் நந்தா பெரியசாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நந்தா பெரியசாமி கூறியிருப்பதாவது:-
துரோகமற்ற பருத்தி வீரன்களை: பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல... அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம்...
தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம்... அவர் பக்கம் துணை நிற்போம்... இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications