பட்டா மாறுதல்.. குடியாத்தம் விஏஓ ஆபீசுக்குள் நுழைந்த விவசாயி.. வசமா மாட்டிய ஆபீசர்.. பெண் அதிகாரியும்
சென்னை: போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. எனினும், இப்போது ஒரு அதிகாரியே சிக்கியிருப்பது வருவாய்த்துறையில் மிகுந்த அதிர்ச்சியை தந்து வருகிறது.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
தமிழக அரசு: ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் நடவடிக்கை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதனால்தான், இதற்கும் அரசு ஒரு வழியை செய்திருக்கிறது.. அதன்படி, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது.
முறைகேடுகள்: நில சம்பந்தமான முறைகேடுகள் முதல் ஊழல் புகார்கள் வரை அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதோ நேற்றுகூட ஆவடியில் போலி ஆவண மோசடியில் ஒருவர் சிக்கி உள்ளார்.. அதேபோல, நில சம்பந்தமான விவகாரத்தில் லஞ்சம் கேட்டதாக, ஒரு அதிகாரியே சிக்கி உள்ளார். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ளது அக்ரஹாரம்.. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயமுருகன்.. 38 வயதாகிறது.. கிராம நிர்வாக உதவியாளராக இருப்பவர் தேன்மொழி.. குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இந்த தேன்மொழி.. 41 வயதாகிறது.
இந்நிலையில், குடியாத்தம் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் என்ற விவசாயி, விஏஓ அலுவலகத்துக்கு வந்திருந்தார்.. அவரது நிலம் அளவீடு செய்து பட்டா மாற்றி தரும்படி கிராம நிர்வாக அலுவலகத்தில் இதற்கான மனுவையும் தந்துள்ளார்..

விஏஓ கறார்: இந்த நிலம் அளவீடு செய்து பட்டா மாற்றி தருவதற்கு, விஏஓ ஜெயமுருகன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.. தான் ஒரு விவசாயி என்றும், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்றும் சொல்லி உள்ளார்.. எனினும், லஞ்சம் கொடுத்தால்தான், வேலை நடக்கும் என்று விஏஓ தரப்பில் சொன்னார்களாம். ஆனால், லஞ்சம் விரும்பாத மேகநாதன், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் இது சம்பந்தமாக புகார் செய்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, மேகநாதனிடம் தந்து, அதை விஏஓ ஜெயமுருகனிடம் தரும்படி சொன்னார்கள்.. மேகநாதனும் லஞ்ச பணத்தை கொடுக்கவும், விஏஓ அதனை வாங்கியபோது, மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
அதிரடி கைது: அவரிடம் நடத்திய விசாரணையில் பலரிடம் இப்படி லஞ்சப்பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.. இவர் யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்குகிறாரோ, அதில், தேன்மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது 2 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர்.. கிராம நிர்வாக அதிகாரியே லஞ்சம் வாங்கியிருப்பது, வருவாய்த்துறையினர் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications