ஆசையா காத்திருக்கும் அரசு ஊழியர்கள்.. ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திலும் நெருங்குது டைம்.. அரசு அமைதி ஏன்
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை இந்த செப்டம்பர் மாதத்துக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான, மத்திய அரசின் கெடு, வரும் 30ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், தமிழக அரசின் ஓய்வூதிய திட்டக்குழு என்ன செய்ய போகிறது? என்ற கேள்வியும், ஆர்வமும் அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த ஏப்ரல் 1ந்தேதி முதல் மத்திய அரசு அறிமுகம் செய்ததுடன், இத்திட்டத்தை தேர்வு செய்வதற்கு வருகிற 30ந்தேதி வரை மட்டுமே அவகாசத்தையும் தந்துள்ளது.

காலக்கெடு முடிவதற்குள் ஊழியர்கள் அந்த திட்டத்தை தேர்வு செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம் 4 நாட்களுக்கு முன்புகூட அறிவித்து நினைவூட்டியிருந்தது..
ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி?
அதுமட்டுமல்ல, புதிய ஓய்வூதிய திட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த தேதிக்குப் பிறகு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கோர முடியாமல் முடியாது.. அப்படி ஆன்லைனில் தேர்வு செய்ய முடியாமல் போனால், மேற்படி காலக்கெடுவுக்குள் தங்களுக்கு சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம், மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததுமே எதிர்ப்பு கிளம்பியது.
எனவேதான், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் இவைகளில் எது சிறந்தது? என்பதை தேர்வு செய்து செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது..
இதற்காகவே, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைத்தது. அந்த குழுவும், அரசு ஊழியர் சங்கங்களிடமும், ஆசிரியர் சங்கங்களிடமிருந்தும் கருத்துக்களை கேட்டது. ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் 2 பேர் வீதம் அனுமதிக்கப்பட்டு, தலா 3 நிமிடங்கள் அவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
டைம் முடிய போகுது
3 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுவானது, 9 மாதத்துக்குள் தன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.. அதன்படி, இந்த குழுவானது, அறிக்கை தாக்கல் செய்வதற்கு, வரும் 30ம் தேதி வரைதான் கால அவகாசம் உள்ளது.
இதுவரை சங்கங்கள் அளித்த கோரிக்கைகளில், பெரும்பான்மையாக உள்ள பென்ஷன் திட்டம் எது? என்பதை நிதித்துறை லிஸ்ட் எடுத்து வருகிறது. ஆனால், இந்த பணி இன்னும் முடியாமல் உள்ளது.
மற்றொருபக்கம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள், மாநில அரசுகள் தேர்வு செய்வதற்கான காலக்கெடுவும், வரும் 30ம் தேதியுடன் நிறைவாகிறது. 30ம் தேதிக்குள் திட்டத்தில் இணைவது குறித்து அறிவித்தால் மட்டுமே வரிசலுகைகள் கிடைக்கும்.. இல்லாவிட்டால், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் என்ற 2 வாய்ப்புகள் மட்டுமே இருக்கும்.
அந்தவகையில், இரண்டிற்குமே ஒரே நாளில் அவகாசம் முடிகிறது.. இதுகுறித்து தமிழக அரசும் எந்த முடிவையும் இதுவரை சொல்லாமல் அமைதியாக இருக்கிறதாம்.
பழைய ஓய்வூதிய திட்டம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்பதே, பல சங்கங்களின் கோரிக்கையாக உள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டத்தை தான், தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டிய தேவையே இல்லை" என்று அரசு ஊழியர்கள் சங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications