சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சென்னை பஸ் செயலி" இனி பேருந்துகளை டிராக் செய்யலாம்.. செம்ம அப்டேட் கொடுத்த போக்குவரத்து கழகம்!

சென்னை பஸ் செயலி மூலமாக பயணிகள் அரசுப் பேருந்துகளை டிராக் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதிகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்கள் செல்ல உள்ள வழித்தடத்தில் எத்தனை பேருந்துகள் வருகிறது என்பதையும் பொதுமக்கள் அறிய முடியும் என்று தெரிய வந்துள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் செயலி மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது.

இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு சென்னை பஸ் ஆப் மூலம் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தர்மம் நிச்சயம் வெல்லும்..கே.பி.முனுசாமி நம்பிக்கை.. தென்னரசுவை வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா ஓபிஎஸ்? தர்மம் நிச்சயம் வெல்லும்..கே.பி.முனுசாமி நம்பிக்கை.. தென்னரசுவை வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா ஓபிஎஸ்?

சென்னை பஸ் செயலி

சென்னை பஸ் செயலி

இதன் மூலமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ள முடியும். அதேபோல் பேருந்து தடம் குறித்த Search Route option-யை க்ளிக் செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

லைவ் லொகேசன்

லைவ் லொகேசன்

அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான வழித் தடத்தினை தேர்ந்தெடுத்து க்ளிக் செய்வதன் மூலம் அந்த வழித்தடத்தில் வரும் பேருந்துகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு (Live Location) மூலமாக பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பும் வசதியும் உள்ளது.

பயணிகள் கருத்திடலாம்

பயணிகள் கருத்திடலாம்

அதேபோல் பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துக்களை பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. இந்த செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.

குறுஞ்செய்தி

குறுஞ்செய்தி

இந்த செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அவர்களது முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வருகிறது என்ற விபரத்தையும் அறியலாம். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையினை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிட இந்த செயலி பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
People can know the Location of Government Corporation buses through the Chennai Bus app says Transport Minister S.S. Sivashankar. It has also come to know that the public can also know how many buses are coming along the route.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X