சென்னையில் சாரை சாரையாக வீட்டை காலி செய்யும் மக்கள்.. இங்கெல்லாம் இப்ப செம்ம டிமாண்ட் ஆகிடுச்சு!
சென்னை: மார்கழி மாசம் என்ற போதிலும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சாரை சாரையாக வீட்டை காலி செய்ய தொடங்கி உள்ளனர். அடுத்த ஜனவரி மாதம், அதாவது தை மாதமும், வரும் ஏப்ரல் மே மாதங்களிலும் பலர் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையானது டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மொத்த சென்னையும் கிட்டத்தட்ட ஒரு வாரம் வெள்ளத்தால் மிதந்தது. சென்னையில் ஏரியை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீர் மூழ்கின.சென்னையின் தாழ்வான பகுதிகள் முழுவதாக தண்ணீரில் மூழ்கியது. தரைத்தளத்தில் அதாவது கிரவுண்ட் புளோரில் குடியிருந்த மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டனர். வீட்டில் வைத்திருந்த பீரோ, கட்டில், மெத்தை, உணவு பொருட்கள், அரிசி, மளிகை ஜாமான்கள், டிவி , பிரிட்ஜ், மின் மோட்டார்கள், வாசிங் மெஷின், துணிமணிகள் என பல பொருட்கள் வெள்ளத்தில் வீணாய் போயின.

மாடிகளில் இருந்தவர்கள் தரையில் நிறுத்தி இருந்த கார்கள், வாகனங்களை பறிகொடுத்தார்கள். அதேநேரம் மாடிகளில் இருந்தவர்கள் தண்ணீர் மாடி வழியாகவும் உள்ளே இறங்கி, அத்தியாவசிய பொருட்களை சேதப்படுத்தியது. மேலும் வேலைக்கு போக முடியாமல் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல், மின்சாரம் இல்லாமல் ஒரு வாரம் வரை அவதிப்பட்டனர்.
இதனால் வெள்ளம் வடிந்த பின்னர், இயல்பு நிலைக்கு திரும்ப பலரும் போராடி வருகிறார்கள். பலர் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்ட நிலையில் , இனியும் இந்த வீடுகளில் இருக்க வேண்டும் என்று யோசிக்க தொடங்கினார்கள். வெள்ள பாதிப்பு எங்கெல்லாம் பெரிய அளவில் இல்லை என்று அந்த பகுதிகளுக்கு மாற தொடங்கி உள்ளனர்.
சென்னையில் வெள்ள பாதிப்புக்குள்ளான மயிலாப்பூர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை, கொரட்டூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் கொளத்தூர், முடிச்சூர், எஸ் கொளத்தூர், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை காலி செய்து, ஆழ்வார்பேட்டை, தாம்பரம் சேலையூர், ஆலந்தூர், பரங்கிமலை போன்ற பகுதிகளுக்கு குடியேறே அதிகம் விரும்புகிறார்கள். இதேபோல் ஜமீன் பல்லாவரம், ஆழ்வார்பேட்டை , ஆதம்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் வாடகைக்கு செல்ல மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
சென்னையில் பொதுவாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் வீடு மாறுவார்கள். அதாவது பள்ளிகளில் குழந்தைகள் படிப்பார்கள் என்பதால் அதற்கு தகுந்தாற்போல், வீடு மாறுவதை ஏப்ரல் மே மாதங்களில் மேற்கொள்வார்கள். ஆனால் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பரிலேயே பலர் ஆன்லைன் தளங்களில் வீடு தேடுவதுஅதிகரித்துள்ளதாம்.
பிரபலமான ஆன்லைன் தளம் ஒன்றில் 15 சதவீதம் வரை வீடு தேடுவது அதிகரித்துள்ளது. பொதுவாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதியில் யாரும் வீடு தேடுவதை விரும்பவில்லையாம். மாறாக வடபழனி, ஆதம்பாக்கம், ஆலந்தூரை விரும்புகிறார்கள். இதேபோல் ஐடி பணியாளர்கள் பெருங்குடியை பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் அங்கு தரைதளம் என்றால் தெறித்து ஓடுகிறார்கள் சோழிங்கநல்லூர், கிண்டி, துரைப்பாக்கம் பகுதிகளில் வீடுகள் தேடுவது மிக குறைவாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. முடிச்சூரைச் சேர்ந்த பலர், ஓல்டு தாம்பரம், சேலையூர் கடபேரி போன்ற பகுதிகளை விரும்புகிறார்களாம்.
இது மார்கழி மாசம் என்ற போதிலும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சாரை சாரையாக வீட்டை காலி செய்ய தொடங்கி உள்ளனர். அடுத்த ஜனவரி மாதம், அதாவது தை மாதமும், வரும் ஏப்ரல் மே மாதங்களிலும் பலர் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications