சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமியுடன் பேரறிவாளன் சந்திப்பு! தாய் அற்புதம்மாளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்..!

Google Oneindia Tamil News

சென்னை : உச்ச நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழக முன்னாள் முதல்வரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, தனது தாய் அற்புதம்மாள் உடன் இன்று நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின் போது, தன்னை விடுதலை அளிக்கக்கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார் எனவும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

“பேரறிவாளன் ரிலீஸுக்கு ஜெயலலிதா, எடப்பாடி, ஓபிஎஸ் தான் காரணம்” - போட்டிக்கு வந்த முன்னாள் அமைச்சர்! “பேரறிவாளன் ரிலீஸுக்கு ஜெயலலிதா, எடப்பாடி, ஓபிஎஸ் தான் காரணம்” - போட்டிக்கு வந்த முன்னாள் அமைச்சர்!

பேரறிவாளன் வழக்கு

பேரறிவாளன் வழக்கு

அப்போது ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை விவகரத்தில் அமைச்சரவை முடிவெடுத்தபின் ஆளுநர் முடிவெடுக்க அவசியமே இல்லை எனவும், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க முடிவெடுக்க காலதாமதம் ஏன்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் விடுதலை

இதற்கிடையே இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

பேரறிவாளன் நன்றி

பேரறிவாளன் நன்றி

தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்துப் பேசினர் அவர்களை வரவேற்ற ஸ்டாலின் பேரறிவாளன் உடல் நலம் குறித்து விசாரித்தார் தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Recommended Video

    CM Stalin-ஐ சந்தித்த AIADMK MP Ravindhranath Kumar
    எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

    எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

    பின்னர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்து பேசினர். கடந்த ஆட்சிக்காலத்திலும் தற்போது தமிழக சட்டமன்றத்திலும் தங்களை விடுவிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    English summary
    Perarivalan, who was released by the Supreme Court today, met former Tamil Nadu Chief Minister and Leader of the Opposition in the Tamil Nadu Assembly Edappadi K Palaniswami in person with his mother Arpudammal today and expressed his gratitude.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X