சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதும்பா.. எனக்கு சர்க்கரை.. கட்டியணைத்து கண்ணீர்விட்ட அற்புதம் அம்மாள்! தாயை தேற்றிய பேரறிவாளன்!

Google Oneindia Tamil News

சென்னை: தன் மகனை விடுவிப்பதற்காக 31 ஆண்டுகளாக போராடிய அற்புதம் அம்மாள் தனது போராட்டத்தில் வென்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

Recommended Video

    Perarivalan தாய் Arputhammal தாய்மையின் இலக்கணமாக இருக்கிறார் - முதல்வர் Stalin பாராட்டு

    எத்தனை எத்தனை கடிதம்.. எத்தனை எத்தனை போராட்டம்.. எத்தனை எத்தனை விசாரணைகள்.. தன்னுடைய மகனை சிறை கம்பிகளில் இருந்து வெளியே கொண்டு வர ஒரு யுக போராட்டத்தை நடத்திய அற்புதம் அம்மாள் வென்று இருக்கிறார். ஒரு தாய் தன் மகனுக்காக.. தன் மகனை காப்பதற்காக எந்த போராட்டத்தையும் முன்னெடுப்பார்.. எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டாக நம் கண் முன்னே நிற்கிறார் அற்புதம் அம்மாள்!

    ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா? ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா?

    31 வருட போராட்டத்தில் வென்று.. தன் மகனை சிறையில் இருந்து மீட்டு.. சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் வெண் சிகை போராளி அற்புதம் அம்மாள்!

    போராட்டம்

    போராட்டம்

    இந்த வழக்கில் 31 வருடமாக விடாமல் போராடியவர் அற்புதம் அம்மாள்தான். ஆங்கிலம், இந்தி தெரியாமல், டெல்லி வரை சென்று தனது மகனுக்காக தொடர்ந்து போராடினார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று யாருடையாக ஆட்சியாக இருந்தாலும், அதன் தலைவர்களை சந்தித்து என் மகனை விடுதலை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இந்த 30 ஆண்டுகளில் தனது மொத்த வாழ்க்கையையும் தன் மகனின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர் அற்புதம் அம்மாள்.

    அற்புதம் அம்மாள்

    அற்புதம் அம்மாள்

    ஒரு பக்கம் சட்ட ரீதியாக போராட்டம்.. வக்கீல்களுடன் ஆலோசனை.. ஆளும் கட்சியினருடன் ஆலோசனை என்று அரசியல் ரீதியான போராட்டங்களை மேற்கொண்டார். இன்னொரு பக்கம் சாலைகளில் இறங்கி பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம், பெரிய கூட்டங்களில் முழுக்க உரை, அறிக்கை வெளியிட்டு போராட்டம் என்று பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார். இவரின் முதல் போராட்டம் தனது மகனின் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்று போராடினார்.

    தூக்கு மேடை

    தூக்கு மேடை

    தூக்கு மேடைக்கு அருகில் இருந்த தனது மகனை மீட்க கடுமையான சட்ட போராட்டங்களை முன்னெடுத்தார். இந்த சட்ட போராட்டத்தில் முதல் வெற்றியை ருசித்தவர்.. தனது மகனை தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றினார். அதோடு நிற்காமல் மகனை மொத்தமாக விடுதலை செய்ய இரண்டாம் கட்ட சட்ட போராட்டத்தை தொடங்கினார். ஒரு பக்கம் மொத்தமாக 7 பேரையும் விடுதலை செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    அதன்பின் ஆளுநர் இதில் காலம் தாழ்த்தவே.. தனக்கு விடுதலை வேண்டும் என்று பேரறிவாளன் வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், ஆளுநருக்கு எதிராக கடுமையான சட்ட போராட்டத்தை தற்போதைய திமுக அரசும் முன்னெடுத்தது. வழக்கறிஞர் திவேதி போன்ற திறமையான வழக்கறிஞர்களை களமிறக்கி ஆளுநருக்கு எதிராக கடுமையான வாதங்களை தமிழ்நாடு அரசு முன் வைத்தது.

    வெற்றி

    வெற்றி

    இந்த நிலையில்தான்.. இத்தனை வருட சட்ட போராட்டத்திற்கு பின் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இன்று தீர்ப்பு வந்ததும் பேரறிவாளன் இருக்கும் ஜோலார்பேட்டை வீட்டை வெடி வெடித்து கொண்டாடப்பட்டது. வீட்டிற்கு வெளியே இருந்தவர்கள் கோஷம் எழுப்பி கொண்டாடினர்.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    வீட்டிற்கு உள்ளே சென்ற பலர் அற்புதம் அம்மாளுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார். போதும்பா.. போதுமா நான் சர்க்கரை வியாதி காரி.. அவனுக்கு கொடுங்க என்று அற்புதம் அம்மாள் கூற.. எல்லோரும் பேரறிவாளனுக்கு இன்று இனிப்பு வழங்கினார். அதை பார்த்து அங்கேயே அற்புதம் அம்மாள் கண்ணீர்விட்டார். உடைந்து எழுந்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

    பேரறிவாளன் அற்புதம் அம்மாள்

    பேரறிவாளன் அற்புதம் அம்மாள்

    இதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த பேரறிவாளன்.. தாயை கட்டிபிடித்து ஆறுதல் கூறினார். பேரறிவாளன் கண்கள் முழுக்க குளமாக இருந்தனர். அற்புதம் அம்மாளும் மகன் இனி வீட்டில்தான் இருப்பான் என்ற ஆனந்தத்தில் நெகிழ்ச்சியாக காணப்பட்டார்.. 31 வருடங்களுக்கு முன் விட்ட கண்ணீருக்கான பதில்தான் இந்த ஆனந்த கண்ணீர்! இவரின் போராட்டத்தை எப்படி சொல்வது.. அவர் போராட்டத்திற்கான பாராட்டு அவரின் பெயரிலேயே இருக்கிறது.. அற்புதம்! அற்புதம்! அற்புதம்! இன்று இரவு சோகங்கள் இன்றி நிம்மதியாக உறங்குங்கள் அம்மாள்!

    English summary
    Perarivalan Released: Aruptham Ammal celebrates the moment with less sweet more tears. தன் மகனை விடுவிப்பதற்காக 31 ஆண்டுகளாக போராடிய அற்புதம் அம்மாள் தனது போராட்டத்தில் வென்றுள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X