பெட்ரோல், டீசல் விலை இன்று உயரவில்லை... சற்றே ஆறுதல் - ஏறிய விலை இறங்குமா?
பெட்ரோல் , டீசல் விலையில் இன்று எந்த வித மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 86 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 88 ரூபாய் 87 பைசாவாக விற்பனையாகிறது.
சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இன்று எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் , டீசல் விலையில் இன்று எந்த வித மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 86 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 88 ரூபாய் 87 பைசாவாக விற்பனையாகிறது.விலை உயர்வு இல்லாததால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பீகார் தேர்தலை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலை உயர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் பீகார் தேர்தல் முடிந்த உடன் நவம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயரத்தொடங்கியது. தினசரி விலை உயர்வினால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது. சில நாட்கள் விலைகள் குறைக்கப்பட்டன.
இந்த நிலையில் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஞாயிறன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் விலை 29 காசுகளும் அதிகரிக்கப்பட்டது. நடப்பு மாதத்தில் 12-வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.21க்கும் டீசல் ரூ.84.07க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மும்பையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்கியுள்ளது. ஒரு லிட்டர் ரூ.99.49க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் ரூ.93.21 ஆக விற்பனையாகிறது.
பெங்களூருவில் பெட்ரோல் ரூ.96.31ஆகவும், டீசல் ரூ.89.12ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.86ஆகவும், டீசல் விலை ரூ.88.87ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
நேற்றைய தினம் பெட்ரோல், டீசல் மீண்டும் உயர்ந்த நிலையில் இன்று எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 86 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 88 ரூபாய் 87 பைசாவாக விற்பனையாகிறது.விலை உயர்வு இல்லாததால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications