வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்
சென்னை: வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு 15 நிமிடங்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2500 சிஆர்பிஎஃப் வீரர்களுடன் கான்வாய் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது 350 கிலோ வெடிப்பொருடன் மற்றொரு காரில் வந்த தீவிரவாதி கான்வாய் மீது மோதி வெடிப்பொருள்களையும் வெடிக்கச் செய்தார்.

இதில் 40 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். தமிழகம் முதல் கேரளம் வரை தலா ஒரு மகனை இந்தியா இழந்துள்ளது. தமிழகத்தில் இருவர் வீரமரணமடைந்துள்ளனர்.
வீரமரணமடைந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த பெட்ரோல் பங்க் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி இன்றிரவு 8 மணி முதல் 8.15 மணி வரை பெட்ரோல் பங்க்களில் விளக்குகள் அணைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெட்ரோல் பங்க் விற்பனை 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications