பிஎப் அட்வான்ஸ் பணம் எடுக்க வேண்டுமா.. EPFO இல் இவ்வளவு விஷயம் மாறிடுச்சா.. உடனே பாருங்க
சென்னை: EPFO இல் பணம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா, இப்போது பிஎப் கணக்கு நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. எனவே நீங்கள் பிஎப் இல் சிக்கல் இல்லாமல் பணம் எடுப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
மாத சம்பளம் வாங்குவோர், யாரிடமும் கையேந்தாமல் இருக்க, சிக்கலான சூழலில் பிஎப் அட்வானஸ் மூலம் எடுக்கிறார்கள். ஆனால் பிஎப் பணத்தை எடுக்காமல் வயதான காலம் வரை வைத்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய நன்மையாகவே இருக்கும். அதை வைத்து உங்கள் வயதான காலத்தை சிறப்பாக அனுபவிக்கலாம். அப்போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, உயர்கல்விக்கு பேருதவியாக இருக்கும்.

ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், கையில் எந்த சேமிப்பும் இல்லாத போது, கடைசியில் பிஎப் பணத்தை தான் எடுக்க வேண்டிய நிலைக்கு மாத சம்பளம் வாங்குவோர் சில நேரங்களில் தள்ளப்படுகிறாரகள். பிஎப் அட்வான்ஸ் முறையில் உயர்கல்வி, உடல்நிலை பாதிப்பு போன்ற காரணத்திற்காக எடுக்கலாம்.
ஆனால் இபிஎப்ஓ தளம் இப்போது ரொம்பவே மாறிடுச்சு.. பாஸ்வேர்டு போட்டு உள்ளே போய்விட முடியாது. பாஸ்வேர்டு போட்டுஉள்ளே சென்றாலும், உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபியை வைத்து தான் கணக்கை திறக்கவே முடியும். எனவே கையில் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் செல்போன் கண்டிப்பாக வேண்டும். அதேபோல் உங்கள் பெயர் உள்ள அதாவது உங்கள் பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கின் செக் லீப் வேண்டும். அந்த செக் லீபை பென்சிலால் கிராஸாக அடித்து வைத்து போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான் நேராக உள்ளே சென்று பிஎப் அட்வான்ஸ் முறையில் பணம் எடுக்கலாம்
பிஎப் அட்வான்ஸ் எப்படி: epfo இணையதளத்தில் பிஎப் அட்வான்ஸ் பணம் எடுக்க என்ன செய்ய வேண்டும்.
முதலில் https://www.epfindia.gov.in/ இணையதளத்திற்குள் செல்லுங்கள். அதில் சர்வீஸ் என்று இருக்கும் முதல் ஆப்சனில் எம்ப்ளாயி என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Member UAN/Online Service (OCS/OTCP) என்று ஆப்சன் கீழே காட்டும். அதனை கிளிக் செய்தால் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற தளம் திறக்கும்.
அதில் உங்கள் யுஏஎண் நம்பர், அதற்கு கீழ் உங்கள் பாஸ்வேர்டு மற்றும் அதில் உள்ள கேப்சியாவை நிரப்ப வேண்டும். பாஸ்வேர்டு மறந்துவிட்டால், பாஸ்வேர்டு மறந்துவிட்டதற்கான ஆப்சனை கிளிக் செய்து ரீசெட் செய்து ஓபன் செய்யலாம். உள்ளே செல்ல ஓடிபி கேட்கும். உங்கள் மொபைல் வந்த ஓடிபியை போட்ட பின்னர் லாகின் ஆகும்.
லாகின் செய்து உள்ளே சென்றால் அதில் கடைசி ஆப்சனாக இருக்கும். அதில் ஆன்லைன் சர்வீஸ் என்ற ஆப்சனில் ONLINE CLAIM (FORM 31,19,10C & 10D) என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் வங்கி கணக்கு எண்ணை கேட்கும். அதனை செய்த பின்னர் என்ன காரணத்திற்காக பணம் எடுக்கிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். அதற்கும் ஆப்சன் காட்டும் . அதை முடித்துவிட்டு எவ்வளவு பணம் என்பதை குறிப்பிடுங்கள்.
உங்கள் கணக்கில் உள்ள பணத்தில் பாதியை பெற முடியும். அதற்கு மேல் போட வேண்டாம். அதன்பிறகு நீங்கள் கொடுத்த வங்கி கணக்கு எண்ணின் செக் லீப் ஒன்றினை பென்சிலால் ஒரு முறை அடித்து வைத்துள்ள புகைப்படம் எடுத்து அப்லோடு செய்யுங்கள். இறுதியாக உங்கள் முகவரியை டைப் செய்யுங்கள். அதன்பிறகு உங்கள் ஆதாரை ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணிற்கு ஒடிபி வந்துவிடும். அந்த ஒடிபியை டைப் செய்து சப்மிட் கொடுங்கள். இப்போது உங்கள் கோரிக்கை பிராசஸில் உள்ளதாக குறிப்பிடுவார்கள். உங்கள் கோரிக்கை 15 முதல் 20 நாட்களில் நிறைவேறி பணம் உங்கள் வங்கி கணக்கிற்கே வந்துவிடும்.
அதேநேரம் பிஎப் கணக்கில் பணம் எடுக்கும் முன்பு இதையும் கவனமாக பாருங்கள். நீங்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளீர்கள் என்றால், அந்த கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் தற்போது வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு மாற்றிவிடுங்கள். அப்படி செய்தால் மட்டுமே பிஎப் அட்வான்ஸ் பணம் கிடைக்கும். மாறாக வேறுவேறு கணக்கில் பணம் இருந்தால் கிடைக்காது.
அதேபோல் ஏற்கனவே நீங்கள் பணியாற்றிய நிறுவனம், நீங்கள் வேலையை விட்டு அந்த நிறுவனத்தில் நின்ற தேதியை பிஎப் தளத்தில் கண்டிப்பாக குறிப்பிட்டு முடித்திருக்க வேண்டும். அதையும் செய்ய வையுங்கள். இதெல்லாம் சரியாக இருந்தால் பிஎப் அட்வான்ஸ் பணம் உங்கள் கைக்கு 15 முதல் 20 நாட்களில் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications