அடமானத்தில் வைக்கப்படும் தங்க நகைகள்.. வங்கியில் குறைந்த வட்டி.. அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள் இவை
சென்னை: வங்கிகளில் நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவது நம்மிடத்தில் பொதுவான விஷயமாக உள்ளது.. அவசர தேவைகள், பிசினஸ் ஆரம்பிக்க, விவசாய செலவுகள், மெடிக்கல் செலவுகள் போன்ற பல காரணங்களுக்காக மக்கள் இந்த வகை கடனை பயன்படுத்துகிறார்கள். இதற்கு சில சாதகமான அம்சங்களும், கவனிக்க வேண்டிய பாதகங்களும் இருக்கின்றன. அவைகளை கட்டாயம் அறிந்து வைத்து கொள்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முதலில் சாதகங்கள் என்று எடுத்து கொண்டால், நகை அடமான கடன் பெறுவது மிகவும் எளிதானது. அதிகமான வருமான சான்று, ஐடி விவரங்கள் போன்றவை இல்லாமலேயே கடன் கிடைக்கும்.

சாதகங்கள்
வங்கியில் நகையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப உடனடியாக பணம் வழங்குவார்கள். மற்ற கடன்களுடன் ஒப்பிட்டால் வட்டி விகிதமும் குறைவாக இருக்கும். இதனால் சீக்கிரத்திலேயே நகையை மீட்டு கொள்ள முடியும்.
குறிப்பாக தேசியமய வங்கிகளில் நகை கடன் வட்டி பொதுவாக குறைவாகவே இருக்கும். மேலும், கடன் திருப்பிச் செலுத்தும் கால அவகாசமும் நெகிழ்வாக இருக்கும். சில வங்கிகள் மாதந்தோறும் வட்டி மட்டும் செலுத்தி, முடிவில் முதன்மை தொகையை கட்டும் வசதியையும் தருகின்றன.
தங்க நகைகள் பாதுகாப்பு
சில ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும், குறைந்த நேரத்தில் கடன் தொகை கிடைக்கும்... அதிலும், வீடு, நிலம் போன்ற சொத்துக்களை அடமானம் வைப்பதை விட, நகைகளை அடமானம் வைப்பதற்கு குறைந்த ஆவணங்களே தேவைப்படும் என்பதால் கடன் பெறுவதை எளிதாக்குகிறது.
நகைக்கடனை நீண்ட காலத்திற்கு திருப்பி செலுத்தும் வசதி உள்ளதால் தவணை தொகையை குறைத்து, நிதி சுமையை குறைக்கலாம். அனைத்துக்கும் மேலாக வங்கிகள் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
பாதகங்கள் - மன அழுத்தம்
அதேபோல சில பாதகங்களும் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் வங்கி நகையை ஏலம் விடும். அது குடும்பத்தின் மதிப்பை பாதிக்கக்கூடியதாகிவிட்டால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
அதேபோல சில நேரங்களில் நகையின் முழு மதிப்பு கடனாக கிடைக்காது. தங்கத்தின் தூய்மை மற்றும் எடை அடிப்படையில்தான் தொகை நிர்ணயிக்கப்படும். மேலும், வட்டி காலம் நீளும்போது மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை அதிகமாகலாம். சில தனியார் நிறுவனங்களில் மறைமுக கட்டணங்கள் இருக்க வாய்ப்பும் உள்ளது.
நடைமுறை சூழலுக்கேற்றவாறு தங்கத்தின் மதிப்பு மாறக்கூடும் என்பதால் கடனை திருப்பி செலுத்தும் போது, நகைகளின் மதிப்பு குறைந்து இருக்கலாம்.
நகைக்கடன் அடமானம்
எனவே, நகை அடமானம் வைக்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலில் வங்கியின் வட்டி விகிதம், கடன் காலம், அபராத கட்டணங்கள் ஆகியவற்றை தெளிவாக கேட்டறிய வேண்டும். நகையை பாதுகாப்பாக வைத்திருப்பார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். கடன் ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகளை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு சில ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்.. அடையாள சான்றாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது பான் அட்டை கேட்கப்படும். முகவரி சான்றும் அவசியமாகும். சில வங்கிகள் போட்டோக்கள் கேட்கலாம். நகை மட்டும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
மொத்தத்தில், நகை அடமானக் கடன் சரியான முறையில் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதை திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்து தான் இந்த கடனை எடுத்துக் கொள்வது நல்லது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications