Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருஷத்துக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும்.. பிஎம் கிசான் நிதி உதவி திட்டம்.. விவசாயிகள் உடனே இதை பண்ணிடுங்க!

Subscribe to Oneindia Tamil

குமரி: பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தின் 21வது தவணை இந்த மாதம் வெளியிடப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தின் 21வது தவணைத்தொகையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

pm-kisan-scheme-offers-6-000-annual-aid-farmers-must-do-this-immediately

பிஎம் கிசான் நிதி

பாரத பிரதமரின் பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும், வரும் காலங்களில் தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் தவணைகளைப் பெற தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில உடைமை ஆவணங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயி அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

உடனே பதிவு செய்யவும்

வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதுநாள் வரை நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள், அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை ஆதார் எண், கைபேசி எண், நில ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிஎம் கிசான் நிதி உதவி திட்டம் என்பது விவசாயிகளுக்கு பலனளிக்கக்கூடிய சிறந்த திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தீபாவளிக்கு முன்பாக அக்கவுண்டிற்கு வரும்

விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக இந்த பணம் வரவு வைக்கப்படுகிறது. மூன்று தவணைகளாக இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படும்.

கடைசியாக, 20வது தவணை ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று செலுத்தப்பட்டது. தற்போது விவசாயிகள் 21வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தவணைத்தொகை தீபாவளிக்கு முன்பாக செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

7 கோடி விவசாயிகள் பயன்

2 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு இந்த உதவி தொகை அளிக்கப்படுகிறது. ஆதார் கார்ட், வங்கி கணக்கு விவரங்கள், நில உரிமை ஆவணங்கள், மொபைல் நம்பர் ஆகியவற்றை அளித்து இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம். நாடு முழுவதும் சுமார் 7 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+