ஏப்.6ம் தேதி முதல் தாம்ரம்-ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்! இன்று முன்பதிவு தொடங்குகிறது
சென்னை: ஏப்.6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே கூடுதல் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
தினமும் தாம்பரத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை, பரமகுடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் சென்று சேர்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்திருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.6ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே தினசரி ரயில் சேவைக்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன்படி தாம்பரத்திலிருந்து வண்டி எண் 16103 எனும் ரயில் மாலை 6.10 மணிக்கு புறப்படும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய நிறுத்தங்களில் இது நின்று செல்லும். இறுதியாக ராமேஸ்வரத்திற்கு அதிகாலை 5.40 மணிக்கு சென்று சேரும்.
மறுமார்க்கமாக ராமேஸ்வரத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரயில் டெல்டா மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக மாறும் என்று பயணிகள் கூறுகின்றனர். காரணம், சென்னையிலிருந்து திருவாரூருக்கு தினசரி 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வாரத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலும் 2 ரயில்கள்தான். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயில் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த ரயில் நள்ளிரவில் செல்வதால் பயணிகளிடையே வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications