பிடிஆருக்கு தமிழே தெரியாது.. ஸ்டாலின் ஆங்கிலத்தை பார்த்து மோடியே அரண்டுவிட்டார்.. அண்ணாமலை அட்டாக்!
சென்னை: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழே தெரியாது.. முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலத்தை பார்த்து பிரதமரே பயந்துவிட்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு போல தமிழ்நாடு மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கோரி பாஜக சார்பாக இன்று போராட்டம் நடத்தப்படுகிறது.
ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பாஜக பேரணி நடத்தி வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அண்ணாமலை
பேரணியில் பேசிய அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் மேடையில் பிரதமர் மோடியை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதை எல்லாம் மக்கள் கேட்க மாட்டார்கள். கச்சத்தீவை கருவாடு விற்றது போல விற்றது யார். துபாய்க்கு போனது போல எளிதாக கச்சத்தீவிற்கு செல்லலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார் போல. திமுகவால் கச்சத்தீவை எந்த காலத்திலும் மீட்க முடியாது. அது நடக்காது. பாஜக நினைத்தால் மட்டுமே நடக்கும்.

பிடிஆர் பெயில்
பிரதமர் முன் முதல்வர் பேசியது எல்லாமே தப்பு. பிடிஆர் கொடுத்த தப்பான டேட்டா காரணமாக முதல்வர் தவறாக பேசி உள்ளார். பிடிஆர் எங்கே போய் எக்ஸாம் எழுதினாலும் பெயில் ஆகும் மாணவர். பிடிஆர் வெளிநாட்டில் 2 வங்கிகளை திவாலாக்கிவிட்டார். அவருக்கு தமிழே வராது, அவருக்கு ஏன் ஆங்கிலம்?. மம்மி, மம்மி என்று சின்ன குழந்தை ரைம்ஸ் சொல்லுவது போல அமைச்சர்கள் ரைம்ஸ் சொல்கிறார்கள்

ஸ்டாலின் ஆங்கிலம்
அந்த வீடியோவில் அவர்கள் ஆங்கிலம் காமெடியாக இருக்கிறது. அமைச்சர்கள் ஆங்கிலம் பேசிய வீடியோ பார்த்தால் பயமாக இருக்கிறது. அதிலும் முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசிய ஆங்கிலத்தை பார்த்தால் அச்சமாக இருக்கிறது. இவர் பேசிய ஆங்கிலத்தை பார்த்து பிரதமர் மோடியே பயந்துவிட்டார். பயந்து பயந்துதான் மோடியே டெல்லிக்கு சென்றார்.

மீடியா மீது
தளபதி பேசியதை பார்த்து பயப்படவில்லை. அவர் ஆங்கிலத்தை பார்த்துதான் மோடி பயந்துவிட்டார். தளபதி பேசிய ஆங்கிலத்தை பார்த்து தமிழ்நாடே பயந்துவிட்டது. செய்தியாளர்கள் எனக்கு எதிராக போராட்டம் செய்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த பாரம்பரிய மீடியாவினர் யாரும் எனக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை. மோடிக்கு மரியாதை செய்யாமல் மீடியா என்ற போர்வையில் சுற்றும் நபர்கள்தான் எனக்கு எதிராக போராட்டம் செய்தனர். எனக்கும் மீடியாவிற்கும் பிரச்சனை இல்லை. மீடியா என்ற போர்வையில் இருக்கும் ஓநாய்களிடம்தான் எனக்கு பிரச்சனை
-
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications