என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே!
சென்னை: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி புதுச்சேரியிலும் தொடர்கிறது. அதேசமயம், புதுச்சேரியை பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் தான் இந்த கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில், பாஜக மீது கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் பாமக அன்புமணி.
அதாவது, புதுச்சேரியில் 4 தொகுதிகளைக் கேட்டு பாஜக தலைமையிடம் வலியுறுத்தியிருந்தார் அன்புமணி. சமீபத்தில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும் பாஜகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் அதிமுகவிற்கு 2, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லசின் கட்சியான ல.ஜ.க. விற்கு 2 என 4 தொகுதிகளை ஒதுக்கிய பாஜக தலைமை, பாமகவுக்கு இப்போது வரை தொகுதிகளை ஒதுக்கவில்லை. கடந்த முறையும் பாண்டிச்சேரியில் பாமகவுக்கு சீட் தரப்படவில்லை.

கடுப்பான அன்புமணி
இந்த முறையும் அதையே கையாள பாஜக முடிவு செய்திருக்கிறது. இதனையறிந்த அன்புமணி, இது குறித்து பாஜக பாண்டிச்சேரி தலைவர் ராமலிங்கத்திடம் பேசியிருக்கிறார். அவரோ, " என் கையில் ஏதும் இல்லை. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதையே நான் செய்கிறேன். உங்களுக்கு சீட் வேண்டுமானால் டெல்லிக்குப் போங்கள்.
அங்கிருந்து ஆர்டர் வந்தால் முடிவு செய்யலாம் " என ஒரே போடாகப் போட்டுவிட்டாராம். இதனால் கடும் கோபமான அன்புமணி, டெல்லியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இதுவரை லைன் கிடைக்கவில்லை. இதனால் மேலும் நொந்து போயிருக்கிறாராம் அன்புமணி. இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, அவரிடமிருந்து தொகுதிகளைப் பெற முயற்சித்தார் அன்பு மணி. ஆனால், பாமகவுக்கு நேரம் ஒதுக்கவில்லை முதல்வர் ரெங்கசாமி. இந்த நிலையில், முதல்வரை சந்திக்க புதுச்சேரி பாமக அமைப்பாளர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தகவல்கள்
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
மொத்த சட்டமன்றத் தொகுதிகள்: 30 (தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்) + 3 (மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள்).
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை: 16 இடங்கள்.
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் & கூட்டணிகள்
முக்கிய கூட்டணிகள் (2021):
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA): என்.ஆர். காங்கிரஸ் (AINRC), பாஜக (BJP), அதிமுக (AIADMK).
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (SPA/UPA): திமுக (DMK), காங்கிரஸ் (INC), விசிக (VCK), இந்திய கம்யூனிஸ்ட் (CPI).
வெற்றி விவரங்கள் & வாக்கு சதவீதம்:
என்.ஆர். காங்கிரஸ் (AINRC): 10 இடங்கள் (25.85%)
பாஜக (BJP): 6 இடங்கள் (13.66%)
திமுக (DMK): 6 இடங்கள் (18.51%)
காங்கிரஸ் (INC): 2 இடங்கள் (15.71%)
சுயேச்சைகள் (IND): 6 இடங்கள்
2026 இறுதி வாக்காளர் பட்டியல் புள்ளிவிவரங்கள் (பிப்ரவரி 2026)
புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் பிப்ரவரி 14, 2026 அறிக்கையின்படி:
மொத்த வாக்காளர்கள்: 10,24,507 (சுமார் 10.24 லட்சம்)
பெண் வாக்காளர்கள்: 5,42,152
ஆண் வாக்காளர்கள்: 4,82,216
மூன்றாம் பாலினத்தவர்: 139
வயது வாரியாக: 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த முறையை விட 6.01% அதிகரித்துள்ளது.
2026 தேர்தலுக்கான தற்போதைய கூட்டணிகள் (மார்ச் 2026 வரை)
NDA கூட்டணி (உறுதி செய்யப்பட்டுள்ளது): முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் (16 இடங்கள்) மற்றும் பாஜக (14 இடங்கள்) என 2021-ம் ஆண்டு அதே தொகுதிப் பங்கீட்டு முறையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளன. இக்கூட்டணியில் லட்சிய ஜனநாயக்க கட்சி (LJK) புதிதாக இணைந்துள்ளது. அதிமுக மற்றும் பாமக-வுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
SPA கூட்டணி (பேச்சுவார்த்தையில்): காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மார்ச் 14 அன்று தொடங்கியுள்ளது. காங்கிரஸ் இக்கூட்டணிக்கு தலைமை தாங்க விரும்புவதாக அறிவித்துள்ளது.
இதர கட்சிகள்: நாம் தமிழர் கட்சி (NTK) மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகியவை புதுச்சேரியிலும் களம் காணத் தயாராகி வருகின்றன
- சிறப்பு நிருபர் எழில்
-
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க












Click it and Unblock the Notifications