விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 2026 சட்டசபைத் தேர்தலில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விவரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை எப்படியாவது வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக வலுவான ஒரு கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அனைத்தும் சுமுகமாக முடிந்தது. இதற்கிடையே எந்த கட்சிக்கு எந்த தொகுதிகள் என்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதுவும் இன்றைய தினம் இறுதியானது.

எடப்பாடி பழனிசாமி
இந்தச் சூழலில் தான் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த விவரங்களை அறிவித்தார். முதலில் அவர் பாஜகவுக்கான 27 தொகுதிகள் குறித்த விவரங்களை அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், திருப்போரூர் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. மேலும், ஜெயங்கொண்டம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, உத்திரமேரூர் தொகுதிகளிலும் பாமக போட்டியிடுகிறது. இது தவிர போரூர், செஞ்சி, விருத்தாசலம், பெரம்பூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை, அம்பத்தூர், சேலம் மேற்கு என மொத்தம் 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
விஜய்
இதில் விஷயம் என்னவென்றால் தவெக தலைவரான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. தவெக இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை என்றாலும் கூட விஜய் அங்கு போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான் பாமகவுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாமக போட்டியிடும் தொகுதிகள்
- தர்மபுரி
- பென்னாகரம்
- விக்கிரவாண்டி
- சோளிங்கர்
- திருப்போரூர்
- ஜெயங்கொண்டம்
- ரிஷிவந்தியம்
- காட்டுமன்னார்கோவில்
- சேலம் வடக்கு
- உத்திரமேரூர்
- போரூர்
- செஞ்சி
- விருத்தாசலம்
- பெரம்பூர்
- கீழ்வேளூர்
- மயிலாடுதுறை
- அம்பத்தூர்
- சேலம் மேற்கு
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications