ஏதாவது அதிசயம் நடந்து விடாதா என நம்பினோம்.. வருத்தமாக இருக்கிறது.. ராமதாஸ் வேதனை
சுஜித் மரணம்: ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: சுர்ஜித்தை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், இடர்பாடுகளையும் அனைவரும் அறிவார்கள். அவற்றையும் கடந்து அதிசயம் ஏதேனும் நிகழும்; அச்சிறுவன் உயிருடன் மீண்டு வருவான் என நம்பினோம். அது நடக்காதது சிறுவனின் குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரிழப்பு தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழத்தையும் கண்ணீர்க் கடலில் மூழ்கடித்து விட்டான் குழந்தை சுஜித். எப்படியாவது வந்து விடுவான் என்றுதான் அத்தனை பேரும் நம்பிக் கொண்டிருந்தோம். குழந்தையைப் பார்ப்பதற்காக அத்தனை பேரும் ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் இயற்கை நம்மை ஏமாற்றி விட்டது.
அழுகிய உடலாக இன்று சுஜித் மீட்கப்பட்டிருப்பது நெஞ்சங்களை வெடிக்க செய்துள்ளது. இதற்காகவா இத்தனை பாடுபட்டோம் என்று அத்தனை பேரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சுஜித் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளார்.
|
அதிர்ச்சி அடைந்தேன்
82 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுர்ஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை;குழந்தை இறந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
கடுமையாக போராடினார்கள்
குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரை அனைவரும் கடுமையாக போராடினார்கள். பல்வேறு தரப்பும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது பெரும் சோகம் தான்.இயற்கையும் சதி செய்தது. இயற்கையை வெல்ல முடியாதது வேதனையளிக்கிறது.
|
நிறைய சிக்கல்கள்
சுர்ஜித்தை மீட்பதில் உள்ள சிக்கல்களையும், இடர்பாடுகளையும் அனைவரும் அறிவார்கள். அவற்றையும் கடந்து அதிசயம் ஏதேனும் நிகழும்; அச்சிறுவன் உயிருடன் மீண்டு வருவான் என நம்பினோம். அது நடக்காதது சிறுவனின் குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரிழப்பு தான்.
|
இனி இப்படி நடக்காமல் தடுக்க வேண்டும்
சுர்ஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும்,கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications