சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாரூக்கான் டூ சரத்குமார்! எல்லாமே காசுக்காக ‘இப்படி’ பண்ணலாமா? விளாசி தள்ளிய அன்புமணி! என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை : ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் இந்தியாவில் உள்ள நடிகர் நடிகை பிரபலங்கள் நடித்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகி வருகின்றன,. அது அவர்களுக்கு தெரிகிறதா தெரியவில்லையா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தியாவின் முதல் ஜூனியர் பேட்மின்டன் தொடர் BIG BASH போட்டிகளை, பாமக தலைவர் மற்றும் இந்திய பேட்மின்டன் சங்கத்தின் துணை தலைவர் அன்புமணி ராமதாஸ் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ்

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், துணை தலைவர் மாறன், இந்திய பேட்மின்டன் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ்," கடந்த மாதம் இந்திய அளவில் மிகப்பெரிய போட்டிகள் நடத்தி இருந்தோம் 3000 கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்திய அளவில் விளையாட செய்வது இதன் நோக்கம். நேற்று சூளைமேடு பகுதியை சார்ந்த தனுஷ் தற்கொலை செய்து கொண்டார் கொடுமையான ஒன்று. தமிழ்நாட்டில் 50 முதல் 60 பிஞ்சு குழந்தைகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர். இரு கட்சிகள் முயன்று மூன்று முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அழுத்தம் கொடுக்க வேண்டும்

அழுத்தம் கொடுக்க வேண்டும்

மத்திய அரசு பரிசீலனை செய்து இந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். முதலமைச்சர் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழ்நாட்டையும் மற்ற மாநிலங்களையும் வேறு விதமாக பார்க்க வேண்டும். ஏனென்றால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமான தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அதனால் நீட் தேர்விலிருந்து உடனடியாக விலக்கு கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைகாக தற்பொழுது ஒரு அரசு குழு அமைத்திருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டம் என்பது திறன் சார்ந்தது அல்ல. இது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு. தமிழ்நாடு அரசு உருவாக்கிய குழு கொடுத்த பரிந்துரை குறித்து எந்த விளக்கமும் அரசு அளிக்கவில்லை. உடனடியாக அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

Recommended Video

    DGP Sylendra Babu Speech | நடிகர்களை நம்பி ஏமாற வேண்டாம் இளைஞர்களே! | #TamilNadu
    விளம்பரங்களில் நடிகர்கள்

    விளம்பரங்களில் நடிகர்கள்

    இந்தியாவில் உள்ள நடிகர் நடிகை பிரபலங்கள் ஆன்லைன் ரம்மிக்காக விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகி வருகின்றன. அது அவர்களுக்கு தெரிகிறதா தெரியவில்லையா என்று தெரியவில்லை. பணத்திற்காக இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்க வேண்டுமா? ஷாரூக்கான் அமிதாபச்சன் உட்பட தெரியாமல் யாரும் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை தெரிந்துதான் தான் காசுக்காக நடிக்கிறார்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    English summary
    Famous Indian actors and actresses are appearing in advertisements related to online rummy. Due to this, lakhs of families are getting ruined. PMK leader Anbumani Ramadoss has severely criticized them whether they know it or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X