சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தேங்க்ஸ்".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை "அது"தான் காரணமா?

முதல்வருக்கு ராமதாஸ் போன் போட்டு நன்றி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்து நன்றி தெரிவித்ததாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. வன்னியர்களுக்கு 10. சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக இந்த நன்றியை ராமதாஸ் தெரிவித்திருந்தாலும், இதற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்குமா? என்ற சந்தேகம் வலுக்கிறது.. அத்துடன் இன்று ட்விட்டரில் ராமதாஸ் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார்..!

அதிமுக ஆட்சியின்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கி மசோதா நிறைவேற்றப்பட்டது..

வெளிநாடு போறீங்களா.. இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க தடுப்பூசி டோஸ் போட அவசியமில்லை.. முழு விவரம்! வெளிநாடு போறீங்களா.. இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க தடுப்பூசி டோஸ் போட அவசியமில்லை.. முழு விவரம்!

ஆனால், தேர்தலுக்குப் பிறகு அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மசோதா என்னாகும்? என்ற சந்தேக கேள்வி எழுந்து கொண்டே இருந்தது..

 நம்பிக்கை

நம்பிக்கை

இதுகுறித்து நடந்து முடிந்த சட்டமன்றத்தில்கூட பாமக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், சீர் மரபினருக்கு 7 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.

நன்றி

நன்றி

இதற்காகத்தான் இத்தனை காலமும் போராடி வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு திமுக அரசுக்கு நன்றிகளை சொல்லி உள்ளனர்.. ராமதாஸ் தன்னுடைய ட்வீட்டில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

 ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

இதையடுத்து ராமதாஸுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. ட்விட்டர் முழுக்க ராமதாஸ் புகழை அக்கட்சியினர் பாடி வருகின்றனர்.. #ThankYouDrAyya என்ற பெயரில் ட்விட்டல் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.. நீ ஜெயிச்சுட்டே மாறா என்றும், நீங்கள்தான் எங்கள் தலைவர், உங்களால் உரிமை பெற்றோம் என்றும் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.. ஹேஷ்டேக் முழுக்க ராமதாஸ் போட்டோக்கள் நிறைந்துள்ளன.

 உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

அதேசமயம், முதல்வருக்கு ராமதாஸ் போன் செய்து நன்றி தெரிவித்துள்ளதும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க போகிறது.. குறிப்பாக பெரும்பான்மையான வடமாவட்டங்களில் இந்த தேர்தல் நடக்க உள்ளதால், பாமகவின் ஆதரவை பெறுவதற்காகவே, திமுக அவர்களின் கோரிக்கையை இந்த தேர்தல் சமயத்தில் நடத்தி வைத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

விவாதம்

விவாதம்

அதற்கேற்றார்போல, சட்டப்பேரவையில் திமுகவை பாமக எம்எல்ஏக்கள் எந்தவிதமான கேள்வி கேட்டும் நெருக்கடி தரவில்லை.. இதுவே ஒரு விவாதமாக எழுந்தது.. சமீபத்தில் ராமதாஸ் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் போன் போட்டு வாழ்த்து சொல்லி இருந்ததும், இன்று டாக்டர் ராமதாஸ் முதல்வருக்கு போனை போட்டு வாழ்த்து சொல்லி உள்ளதும் ஏதாவது கணக்கு போட்டுத்தானா அல்லது வெறும் அரசியல்நாகரீகமா என்று தெரியவில்லை.. ஆனால், அதிமுக காலத்தில் ஆரம்பித்த ராமதாஸின் போராட்டம், திமுக காலத்தில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது..!

English summary
PMK Leader Dr Ramadoss thanked to CM MK Stalin for giving 10.5 reservation to Vanniyar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X