இந்த அப்பாவ உனக்கு தெரியலைல.. தெரியல! சட்டென வெளியேறிய அன்புமணி.. பனையூரில் பரபர மீட்டிங்! அடுத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் பதவி தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே பல நாட்களாக இருந்த பனிப்போர், பொது குழுவில் மோதலாக வெடித்துள்ளது. இந்த நிலையில் திடீரென பொதுக்குழுவில் இருந்து வெளியேறிய அன்புமணி ராமதாஸ் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியில் 2024 பாமக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ramadoss anbumani ramadoss pmk

மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாமக இளைஞரணி தலைவர்:

இதனை தொடர்ந்து பாமக நிறுவனரும் அன்புமணி ராமதாஸின் தந்தையுமான ராமதாஸ், 2026 சட்டமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகள் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலம் தேவை. அதற்காக அன்புமணிக்கு உதவுவதற்காக பரசுராமன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்கிறேன் என்றார்.

அன்புமணி Vs ராமதாஸ்:

அப்போது அருகில் இருந்த அன்புமணி ராமதாஸ் குறுக்கிட்டு 'எனக்கு உதவியாகவா? எனக்கு வேண்டாம்' அவன் கட்சியில் சேர்ந்தே நாலு மாசம் தான் ஆகுது.. அவனுக்கு பதவியா" என கோபத்தை வெளிப்படுத்தினார் அன்புமணி. 'உனக்கு வேண்டாம் என்றால் நீ போ!' என்ற ராமதாஸ் 'நான் ஆரம்பித்த கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் பரசுராமன் முகுந்தன் தான் இளைஞரணி தலைவர் என்றார்.

ராமதாஸுக்கு எதிர்ப்பு:

அப்போது பொதுக்குழுவில் கலந்து கொண்டிருந்த பாமக தொண்டர்கள் ராமதாஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது "மீண்டும் இது என் கட்சி.. நான் ஆரம்பித்த கட்சி.. நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்" என அழுத்தமாக பேசிய ராமதாஸ், " உங்களுக்கு வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள்" என பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த ராமதாஸ் பனையூரில் நான் புதிதாக அலுவலகம் திறந்துள்ளேன். அங்கு என்னை சந்திக்கலாம்" என கூறியதோடு, தொலைபேசி எண்ணையும் அறிவித்து விட்டு வெளியேறினார்.

நிர்வாகிகள் குழப்பம்:

பல ஆண்டு காலம் ராமதாஸின் பின்னால் இருந்த நிர்வாகிகள் எதிர்கால தலைவரான அன்புமணியின் பின்னால் செல்வதா? அல்லது ராமதாசுடன் தொடர்வதாக என குழப்பத்திலேயே அங்கு இருந்தனர். சில நிர்வாகிகள் அன்புமணி ராமதாசுடன் காரில் புறப்பட்டனர். பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்திலிருந்து வெளியேறிய ராமதாஸ் காரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள பனையூர் அலுவலகம் நோக்கி சென்றார். அப்போது ஏராளமான நிர்வாகிகளும் அவருடன் சென்றனர்.

அன்புமணி ஆலோசனை:

இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் பனையூரில் சில முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் - ராமதாசை சமாதானம் செய்ய சில நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். குறிப்பாக கட்சியின் கௌரவ தலைவரான ஜிகே மணி, பொருளாளர் திலகபாமா ,எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தொண்டர்கள் அதிர்ச்சி:

அதே நேரத்தில் பொது மேடையில் இப்படி கட்சியின் உயர் தலைவர்களும், (தந்தையும் மகனும்) மோதிக் கொண்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டுமல்லாமல், பாமக கட்சி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+