மேகதாது அணை பொறுப்பை தமிழகத்திற்கு தருவீர்களா? சிவகுமாருக்கு அன்புமணி கேள்வி.. அதென்ன இராசிமணல்?
சென்னை: கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டினால் அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தமிழகத்திற்கு கொடுப்பார்களா என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இராசிமணல் அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசி மணல் அணையை கட்ட தமிழக அரசு மற்றும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி ஆறு தமிழ்நாட்டின் உயிர்நாடி 5 கோடி மக்கள் காவிரி நம்பியிருக்கிறார்கள் சென்னை உட்பட 23 மாவட்டங்கள் காவிரியை நம்பி இருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் கர்நாடக அரசிடம் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அங்குள்ள நான்கு அணைகளும் நிரம்பிய உடனே உபரிநீரை தமிழகத்திற்கு கர்நாடகா அரசு திறந்து விடுகிறது. மேலும் பருவ காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் இருக்கிறது. அதனால் இராசி மணல் அணை கட்டும் திட்டம் நல்ல யோசனை அதனை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு செட் தண்ணீர் வராது காவிரி உபரி நீரை நான்கு முக்கிய அணைகளில் நிரம்பிய பிறகு வேறு வழியின்றி தமிழகத்திற்கு உபநீரை திறந்து விடுகிறார்கள் ஆனால் ராசி மணல் அணை கட்டினால் நமக்கு தேவையான தண்ணீரை நாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். வருங்காலங்களில் பருவநிலை மாற்றம் காலநிலை மாற்றம் உள்ளிட்டவர்களால் அடுத்த 10 ஆண்டுகளில் கடுமையான வறட்சி நமக்கு ஏற்பட உள்ளது என ஐநா சபை தெரிவித்துள்ளது இதுபோன்ற நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையிலே தமிழக மக்களுக்கு ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர வேண்டும். நான் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரை கேட்கிறேன், முல்லைப் பெரியாறு 999 வருடங்கள் நிர்வகிக்கும் உரிமையை கொடுத்தது போல மேகதாது அணையை 999 வருடங்கள் கொடுக்கட்டும் நாங்களே அணையை நிர்வகித்துக் கொள்கிறோம். அதற்கு அவர் சம்மதிப்பாரா? நாங்கள் தண்ணீர் கொடுக்கிறோம் கர்நாடகா கேட்பது 5 டி எம் சி தண்ணீர் தான் நாங்கள் 20 டிஎம்சி கொடுக்கிறோம் எங்களுடைய கட்டுப்பாட்டில் அணை இருக்கட்டும் தாராளமாக நாங்கள் தண்ணீர் கொடுக்கிறோம். இவர்கள் ஒத்து கொள்வரா?
கர்நாடக அரசை நம்ப முடியவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதில்லை. நடுவர் மன்ற தீர்ப்பை மதிப்பதில்லை. மதிக்காத ஒரு அரசு இருக்கும் பொழுது எப்படி நம்மால் பேச முடியும். 11 கன அடி நீரை கேட்டோம். ஆனால் 8000 விடுவோம் என திறந்துவிட்டார்கள். ஆனால் மழை பெய்து அணை நிரம்பியதும் 16 ஆயிரம் அடி விடுகிறார்கள். அந்த அளவிற்கு கர்நாடக அரசுக்கு ஈகோ. திமுக கர்நாடகா மற்றும் கேரளா உடன் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசி இந்த விவகாரங்களுக்கு சமூகத் தீர்வு காண வேண்டும்" என்றார்.
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications