அன்புமணி ஒரே போடு.. “சிஏஏ செயல்படுத்தப்படாது” - பாமகவின் நிழல் நிதியறிக்கை! அப்போ பாஜக கூட்டணி?
சென்னை: பாமக வெளியிட்டு உள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில் குடியுரிமை சட்டத் திருத்தம் செயல்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பாட்டாளி மக்கள் கட்சியும் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. மாநில மற்றும் தேசிய அளவிலான விவகாரங்களில் பாமகவின் நிலைபாட்டை விவரிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்று இருக்கின்றன.

அதில் குறிப்பாக மத்திய அரசு விரைவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்து வரும் நிலையில் பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில் குடியுரிமை சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில், "குடியுரிமை சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படாது:
62. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தம் (Citizenship (Amendment) Act, 2019) செயல்படுத்தப்படாது.
63. தமிழ்நாட்டில் இரத்து செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, ஒரு பவுன் தங்கமும், ரூ.50 ஆயிரம் வரை பணமும் வழங்கப்படும்.
64. தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு மாற்றாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பள்ளிக்கல்விக்கு ரூ.1.25 லட்சம் கோடி: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.32,000 கோடி
80. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
81. மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் மொத்தம் 1000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கும்.
82. பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
83. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.
மாநில கல்விக் கொள்கை
84. தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கை நடப்பாண்டில் வெளியிடப்படும்.
85. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
உயர்கல்வி
86. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
87. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
88. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications