“நிர்வாண பூமிக்கு.. ஆடை கட்டி விட்டவன் உழைப்பாளி!” கவிஞர் வைரமுத்து மே தின வாழ்த்து
சென்னை: தொழிலாளர் தினம் மே 1-ந் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உழைப்பாளர் தினத்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அவரது பாணியில் கவிதை மூலம் உழைப்பாளியின் தேவை, சாதனை பற்றி கவிதையில் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் உழைப்பாளர்களுக்கான உரிமை குறித்தும் பேசியிருக்கிறார்.

"மேதினி போற்றும்
மே தினம் இன்று
நிர்வாணச் சுற்றுச்
சுற்றிய பூமிக்கு
ஆடைகட்டி விட்டவன்
உழைப்பாளி
ஊனப்பட்ட உலகத்தின்
உறுப்புத் திருத்தியவன்
உழைப்பாளி
கல்லை விடுதலைசெய்து
கடவுள் கண்டவனும்
கட்டடம் கண்டவனும்
உழைப்பாளி
அவன் ஒருநாளை
மூன்று எட்டாய்ப் பிரித்தது
மே தினம்
எட்டு மணி உழைப்பு
எட்டு மணி ஓய்வு
எட்டு மணி உறக்கம்
மேதினி போற்றும்
— வைரமுத்து (@Vairamuthu) May 1, 2025
மே தினம் இன்று
நிர்வாணச் சுற்றுச்
சுற்றிய பூமிக்கு
ஆடைகட்டி விட்டவன்
உழைப்பாளி
ஊனப்பட்ட உலகத்தின்
உறுப்புத் திருத்தியவன்
உழைப்பாளி
கல்லை விடுதலைசெய்து
கடவுள் கண்டவனும்
கட்டடம் கண்டவனும்
உழைப்பாளி
அவன் ஒருநாளை
மூன்று எட்டாய்ப் பிரித்தது
மே தினம்
எட்டு மணி… pic.twitter.com/8XguHJBNZW
அவன் உழைப்பில்
செல்வம் சேரட்டும்;
ஓய்வை
அறிவும் கலையும் ஆளட்டும்;
உறக்கத்தை
வண்ணக் கனவுகள் சூழட்டும்
மே தினம் வாழ்க!"
என கவிதையில் வைரமுத்து மே தின வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications