சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பேச்சுக்கு ஜெயக்குமார் சொல்றார்னு பார்த்தா.. நிஜமாகவே சேகர் மீது பாய்ந்த கேஸ்.. ஆனால் கைதாவாரா!

Google Oneindia Tamil News

சென்னை: சும்மா ஒரு பேச்சுக்குதான் ஜெயக்குமார் சொல்கிறார் என்று பார்த்தால், நிஜமாகவே எஸ்வி சேகர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.. தேசியக் கோடியை அவமதித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களாகவே எஸ்வி சேகர் பழைய மாதிரி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.. புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி பாடத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.. இந்த விவகாரத்தில் கட்சியின் பிரமுகரான எஸ்வி சேகர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு அதிமுக பற்றி ஒரு கருத்து சொல்லி இருந்தார்.. அதாவது அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கட்சியின் பெயரையும், கொடியையும் மாற்ற வேண்டும் என்றார். இதை பார்த்து அதிமுகவினர் கொந்தளித்துவிட்டனர்.

பால் பாக்கெட்டும்...எஸ்வி சேகரும்...காக்க வைத்து...பழி தீர்த்த அதிமுக!! பால் பாக்கெட்டும்...எஸ்வி சேகரும்...காக்க வைத்து...பழி தீர்த்த அதிமுக!!

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

இதற்கு முதல் நபராக வந்து கண்டனம் சொன்னது அமைச்சர் ஜெயக்குமார்தான்.. அதேபோல முதல்வரும், "எஸ்விசேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார்" என்றார்.. அமைச்சர் காமராஜோ, பிஜேபி கட்சி எஸ்விசேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை.. அதனால நாமும் அவர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

 தேசிய கொடி

தேசிய கொடி

இப்படி பல தரப்பில் இருந்தும் சர்ச்சைகள் றெக்கை கட்டி பறந்த நிலையில்தான், திடீரென யூ டியூப் சேனலில் ஒரு வீடியோ போட்டு, தேசிய கொடியை எஸ்வி சேகர் அவமதித்திருந்தார்.. அதாவது, "தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்" என்பது போன்ற வரிகளை தெரிவித்திருந்தார்.

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

இதனால், எஸ்வி சேகர் மீது நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தந்திருந்தார்.. மேலும், எஸ்வி சேகர் சர்ச்சை பேச்சு குறித்து நேற்று ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் நீண்ட காலமாக ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார்... அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும் என்று கூறியிருந்தார்.

அவமதிப்பு

அவமதிப்பு

இந்நிலையில்தான், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்விசேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. ராஜரத்தினம் ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்வி சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தது பாஜக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 மாரிதாஸ்

மாரிதாஸ்

பால் பாக்கெட் விவகாரம் என்றால் அதற்கு ஓடிவந்து உதவும் இதே அதிமுகதான், எக்குத்தப்பாக பேசி தேசிய கொடியை அவமதித்தால், இதுதான் கதி என்பதையும் சேகருக்கு உணர்த்தி உள்ளது. அதுமட்டுமல்ல, சமீப காலமாக பாஜக மற்றும் பாஜக ஆதரவு நபர்கள் மீது அடுத்தடுத்து வழக்கு பாய்கிறது. மாரிதாஸ், இப்ப எஸ்வி. சேகர்.. இதெல்லாம் ஏதாவது குறியீடா? எதற்கான சேதி? யாருக்கான சேதி? என்பதுதான் தெரியவில்லை.

English summary
sve sekhar: police filed case against sve sekhar for insulting our national flag
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X