சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமண தகவல் மையத்தில்.. மனைவிக்கே வரன் தேடிய 'சைக்கோ' கணவர்.. விசாரணையில் பகீர் தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: திருமண தகவல் மையத்தில் தனது மனைவிக்கே வரன் தேடி போட்டோவை பதிவு செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரை அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி(32).

Recommended Video

    மனைவிக்கு வரன் தேடிய விநோத கணவர்…ஆப்பு வைத்த மாமனார்! பரபரப்பு சம்பவம்!

    இவர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜான்சிக்கும் திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்பாபு மகன் ஓம்குமார் (34) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

    இதைத்தொடர்ந்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் தனது கணவருடன் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

     மனைவியை பிரிந்தார்

    மனைவியை பிரிந்தார்

    இதனால் ஓம்குமார் மனைவியை விட்டு பிரிந்து அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான வெள்ளியூருக்கு வந்தார். கணவன்-மனைவி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து ஓம்குமார் தனக்கு விவாகரத்து கேட்டு பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.தற்போது இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

    விவாகரத்து கிடைக்கவில்லை.

    விவாகரத்து கிடைக்கவில்லை.

    இதுவரையில் இவர்களுக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிரபல திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டுமென தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் அவரது தந்தையான பத்மநாபன் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தவர்கள் ஜான்சியை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்து பத்மநாபனுக்கு தினமும் போன் செய்து வந்தனர்.

    மனைவிக்கு வரன்

    மனைவிக்கு வரன்

    இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மநாபன் தான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் மாப்பிள்ளை வேண்டும் என விளம்பரம் செய்யவில்லை. தனது பெயரில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல் பதிவிட்டுள்ளார்கள் என்பதை அறிந்தார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் கண்காணிப்பாளர் எஸ்பி வருண்குமாரிடம் புகார் கொடுத்தார்.

     காவல் துறையினர் விசாரணை

    காவல் துறையினர் விசாரணை

    இதனை தொடர்ந்து இது தொடர்பாக திருவள்ளூர் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டு தனது மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இதன்பின்னர் போலீசார் ஓம்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்பு அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். திருமண தகவல் மையத்தில் தனது மனைவிக்கே வரன் தேடி போட்டோவை பதிவு செய்த சைக்கோ கணவரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Police have arrested a husband who posted a photo of his wife looking for a groom at a marriage information center. It was revealed that he did so in the rage of not getting a divorce
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X