கோவை கார் வெடிப்பு: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு.. கைதான ஆம்பூர் இளைஞர் வீட்டில் போலீஸ் பரபர சோதனை
திருப்பத்தூர்: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இளைஞர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனாஸ் அலி (வயது 22). இவர் மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார்.
இவர் வெளிநாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

அதிரடியாக கைது
இவர் சமூக வலைதளங்கள் வாயிலாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு திரட்டி வந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் 30 ஆம் தேதி அனாஸ் அலி கைது செய்யப்பட்டார். இவரது மடிக்கணினி, செல்போன், ஹார்ட்டிஸ்கள் உள்பட பல தொழில் நுட்ப சாதனைகளை பறிமுதல் செய்து விசாரித்தனர். அவர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜாமீன் மனு தள்ளுபடி
அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் மத்திய புலனாய்வு காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் அனஸ் அலியின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அனாஸ் அலிக்கு ஜாமின் கேட்டு அவரது குடும்பத்தினர் நவம்பர் மாதம் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருந்த நிலையில் அனாஸ் அலிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடரும் சோதனை
இதற்கிடையே தான் கோவையில் கார் வெடித்த சம்பவம் பரபரப்பானது. இதையடுத்து தமிழகத்தில் என்ஐஏ, போலீசார் உஷாராகி உள்ளனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பலரது வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனாஸ் அலி வீட்டில் சோதனை
இதன் ஒருபகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலி கொள்ளை பகுதியில் உள்ள அனாஸ் அலியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் புஷ்பபுராஜ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டனர் என்பது பற்றிய விபரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications