பிப்.7 க்கு பிறகு சசிகலாவால் அதிமுகவுக்கு என்னாகும்?.. இந்த "இரண்டும்" நடக்கும் வாய்ப்பே பிரகாசம்!
சென்னை: சசிகலா சென்னைக்கு வந்து அதிமுகவை எப்படி கைப்பற்றுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் அது எப்படி சாத்தியம் என்ன வியூகம் வகுத்திருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா வியூகத்தால் அதிமுக மீண்டும் இரண்டாக உடைய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பிப்ரவரி 7ஆம் தேதி சென்னைக்கு வரும் சசிகலா அதற்கு முன்னர் இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு, பொதுச் செயலாளர் குறித்த வழக்கு ஆகியவற்றை தூசு தட்டவுள்ளார். என்னதான் சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தாலும் அவர் சிறைக்கு செல்லும் போது பொதுச் செயலாளர் பதவியுடனே சென்றார்.
தற்போது தினகரனும் அதிமுகவினர் நிச்சயம் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்கிறார். இதெல்லாம் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது.

பாஜகவுடன் கூட்டணி
ஜெயலலிதா வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாஜகவுடன் கூட்டணி வைத்ததோடு சரி அதன்பிறகு அவர் எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததே இல்லை. இதனால் சசிகலாவும் பாஜக எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுப்பார் என்கிறார்கள். அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்கிறார்கள்.

சசிகலா அணி
எனவே இதை வைத்தே தனக்கான ஆதரவை சசிகலா திரட்டுவார் என்கிறார்கள். சசிகலா வந்த பிறகு அதிமுக இரண்டாக பிரியும் என்கிறார்கள். எப்படி எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெ அணி ஜா அணி என பிரிந்ததோ எப்படி ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்ததோ?

ஆதரவு
எப்படி சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என ஆனதோ அதே போல் அதிமுக தற்போது இரண்டாக பிரியும் என்கிறார்கள். இந்த முறை பாஜக ஆதரவு அணி, பாஜக எதிர்ப்பு அணி என இரண்டாக பிரியும் என தெரிகிறது. பாஜகவை எதிர்ப்போர் சசிகலாவை ஆதரிப்பர் என்கிறார்கள். எப்படி இத்தனை நாட்கள் இருந்த இடமே தெரியாமல் இருந்த சில நிர்வாகிகள் தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

அதிமுகவில் தாக்கம்
மேலும் சசிகலாவின் வருகை அதிமுகவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் இதனால் ஓட்டுக்கள்தான் பிரியும் என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதே வேளை சசிகலாவின் முதல் அஜெண்டா அதிமுகவை கைப்பற்றுவதுதான் என்கிறார்கள்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications