சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டை, மாட்டை கடித்து, கடைசியில் மனிதனையே கடிப்பதா? ரயில்வே இந்தி திணிப்பு குறித்து தயாநிதி மாறன்

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனையே கடிப்பதா என தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ் வருவது குறித்து எம்பி தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்தி எதிர்ப்பு குறித்து டி சர்ட் அணிந்து அண்மையில் திரையுலகினர் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் இந்தி தெரியாவிட்டால் லோன் கிடையாது என அரியலூரில் வங்கி மேனேஜர் ஒருவர் கூறியதால் எழுந்த பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் பயனாளிகளுக்கு இந்தியில் மெசேஜ் வருகிறது. இந்தி திணிப்பு வேண்டாம் என சொல்லும் நிலையில் தமிழகத்தில் புக்காகும் ரயில் டிக்கெட்டிற்கு இந்தியில் மெசேஜ் வருவதால் புகார் எழுந்துள்ளது.

ஹத்ராஸ் கொடுமை.. நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி திமுக... கனிமொழி தலைமையில் ஒளியேந்திப் பேரணி..! ஹத்ராஸ் கொடுமை.. நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி திமுக... கனிமொழி தலைமையில் ஒளியேந்திப் பேரணி..!

தொடர்வண்டி

தொடர்வண்டி

இதுகுறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், ஐஆர்சிடிசியில் தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது; இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது. @RailMinIndia இதில் கவனம் செலுத்தி, அந்தந்த மாநில மொழிகளில் உறுதிப்படுத்துதல் செய்தியை அனுப்ப வேண்டுகிறேன்.

ஆட்டைக் கடித்து

ஆட்டைக் கடித்து

#GovernmentOfIndia இது போல், அனைத்துத் தளங்களிலும், இந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாநிதி மாறன் கூறுகையில் ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனிதனையே கடிப்பது போன்ற நிகழ்வுதான் இது.

எதிலும் இந்தி

எதிலும் இந்தி

எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கண்மூடித்தனத்தால், தமிழகத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புகிறது ரயில்வே துறை. இதை உடனடியாக நிறுத்துங்கள்! என்றார் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

இதுகுறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் புரியாத மொழியை மக்களிடம் திணிக்கிறது பாஜக. இந்தி திணிப்பை மும்முரமாக செய்துவருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கனிமொழி கூறியுள்ளார்.

English summary
Politicians condemn SMS in Hindi for those who booked train tickets in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X