சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொன்னதை செய்த கனிமொழி.. திட்டமிட்டபடி பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய திமுக!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு எதிராக பொள்ளாச்சியில் திமுக சார்பாக தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு எதிராக பொள்ளாச்சியில் திமுக சார்பாக தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று திமுக எம்.பி கனிமொழி குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதேபோல் திமுக சார்பில் அங்கு போராட்டம் நடைபெற்று இருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

தேர்தலை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு

முக்கியம்

முக்கியம்

கனிமொழி தனது பேட்டியில், இந்த பாலியல் கும்பலால் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. சிறிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதை உடனே விசாரிக்க வேண்டும்.

இருக்கிறார்கள்

இருக்கிறார்கள்

இவர்களுக்கு பின் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இத்தனை பெண்களை மிரட்டும் அளவிற்கு இவர்களுக்கு பின் பெரிய நெட்வொர்க் இருந்துள்ளது. அதற்கு பின் அதிமுக தொடர்பு இருக்கிறது. அதில் ஒருவர்தான் இந்த பார் நாகராஜன்.

அதிமுக நீக்கம்

அதிமுக நீக்கம்

அவரை இப்போது அவசர அவசரமாக அதிமுக நீக்கி இருக்கிறது. இதில் அரசியல் தொடர்பு இருப்பதால் அதை யாரும் விசாரிக்க பயப்படுகிறார்கள். போலீஸ் இதை விசாரிக்க பயப்படுகிறது. இதில் நிச்சயம் அரசியல் தலையீடு உள்ளது.

யாரை காப்பாற்ற

யாரை காப்பாற்ற

அதனால் இதை போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இது ஊடகங்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். இதில் போலீஸ் யாரையோ காப்பாற்ற முயல்கிறது. அவர்களை கைது செய்ய வேண்டும். விசாரிக்க வேண்டும்.

கண்டிப்பாக நடக்கும்

கண்டிப்பாக நடக்கும்

எங்களுக்கு பொள்ளாச்சியில் போராட அனுமதி மறுத்து இருக்கிறார்கள். தேர்தல் என்பது பொய் காரணம்தான். அரசு மக்களை நினைத்து பயப்படுகிறார்கள். நாங்கள் போராடுவது உறுதி. தடையை மீறி நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று, கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

சொன்னபடி

சொன்னபடி

தற்போது அதேபோல் திமுக சார்பில் அங்கு போராட்டம் நடைபெற்று இருக்கிறது. கனிமொழி தலைமையில் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

English summary
Pollachi Gang Rape Case: We will do out protest as per planned in Pollachi says DMK MP Kanimozhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X