ரொம்ப முக்கியம்! பொங்கல் பரிசை வாங்க ரேஷன் கடைக்கு யார் செல்ல வேண்டும்? தமிழக அரசின் உத்தரவு
சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ள நிலையில் ரேஷன் கடைக்கு குடும்ப உறுப்பினர்களில் யார் எல்லாம் செல்ல வேண்டும் என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக அரசு தரப்பு வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் திருடு போவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக எஸ். எம். எஸ் மூலமாக பில் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது ரேஷன் பொருட்களை வாங்கியவர்களுக்கு எஸ். எம். எஸ் மூலமாக அவர்கள் இணைத்து இருக்கும் போன் எண்ணுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என்று உறுதி செய்வதற்காக பில் அனுப்பப்படும்.
நீங்கள் ரேஷனில் போய் சர்க்கரை வாங்குகிறீர்கள். மற்ற பொருட்கள் எதுவும் வாங்கவில்லை. இதையடுத்து நீங்கள் சர்க்கரை வாங்கியதற்கான பில் உங்களுக்கு வரும்.

பாதுகாப்பு
போனில் நீங்கள் எவ்வளவு சர்க்கரை வாங்கினீர்கள் என்ற விவரம் இருக்கும். நீங்கள் வாங்காத பொருட்கள் அதில் இருந்தால் நீங்கள் புகார் கொடுக்க முடியும். இப்படி திருட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொங்கல் பரிசு பொருட்கள் திருடப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன்
அதன்படியே இந்த வருடமும் பொங்கலுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா இல்லை, பெரிதாக பேரிடர் இல்லை என்ற போதிலும் 1000 ரூபாய் வழங்கப்படுவது கவனம் பெற்றுள்ளது.

பொங்கல்
இந்த நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுகளை பெற குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே செல்ல முடியும். அரசு சார்பாக கொடுக்கப்படும் டோக்கன் +ஸ்மார்ட் ரேஷன் அட்டை + குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே 1000 ரூபாய் கொடுக்கப்படும். இதில் குடும்ப உறுப்பினர்கள் கை ரேகை வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த பணம் வழங்கப்படும். உங்கள் ரேஷன் அட்டையுடன் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இணைக்கப்படவில்லை என்றால் குடும்பத்தில் யாருடைய கை ரேகை இணைக்கப்பட்டு உள்ளதோ அவர்கள் மட்டுமே செல்ல முடியும். அதாவது கை ரேகை பதிவு ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டவர்கள் மட்டுமே பணம் பெற முடியும்.

பரிசு பொருட்கள்
ரேஷனில் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் திருடப்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. பொங்கல் பரிசு வாங்க குடும்ப உறுப்பினர் ஒருவரின் கை ரேகை - ஸ்மார்ட் கார்ட் இரண்டும் இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு மற்றும் பணம் கிடைக்கும். முறைகேடுகளை தவிர்க்க இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.. சில ரேஷன் கடைகளில் கண் விழி சோதனை அமைப்புகள் உள்ளன. அந்த வசதி உள்ள ரேஷன் கடைகளில் கண்களை காட்டி பொருட்களை வாங்க முடியும். நீங்கள் வாங்காத பட்சத்தில் ரேஷன் ஊழியர்கள் அரசை ஏமாற்றி பணத்தை அபகரிக்க கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications