திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கருணாநிதி பெயரை அறிவித்த பொன்முடி - எ.வ. வேலு நன்றி
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கலசப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் கோரிக்கையை ஏற்று அறிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
உயர்கல்வித் துறை சார்பில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்கள் குறித்த அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, பன்நோக்கு சிறப்பு அணுகு முறையுடன் கூடிய அதிநவீன நோய் தொற்று எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க சென்னை சென்னை பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும், ஆசிரியரல்லாத பணியாளர்களின் காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமும் நிரப்ப அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரைகள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளையும் ஆவணமாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாடப்புத்தகங்களில் திராவிட கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. அவைகள் அனைத்தும் தற்போது எடுக்கப்பட்டு விட்டன. கண்டறிய, தேசிய மற்றும் பன்னாட்டு சுகாதார நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மை மையம் அமைக்க பெரியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அறியவும், மாறி வரும் கால நிலையை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு தேவையான உத்திகளை கண்டறியும் வகையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் புதிதாக தொடங்க திட்டம் போன்றவை கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கலசபாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை திருவண்ணாமலை கலை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று பெயர் சூட்டப்படும் என அமைச்சர் பொன்முடி பேரவயைில் அறிவித்தார். கருணாநிதி பெயர் அறிவித்ததற்கு திருவண்ணாமலை மக்கள் சார்பில் நன்றி என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க திமுக முடிவு செய்துள்ளது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறும் என்பது இயல்புதான்.












Click it and Unblock the Notifications