சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒன்றுமே தெரியலை.. அண்ணாமலையை தலைவராக போட்டு நம் உயிரை வாங்குறாங்க.. அமைச்சர் பொன்முடி

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணாமலைக்கு அரசியலே தெரியலை, அவரை பாஜக தலைவராக போட்டுவிட்டு நம் உயிரை வாங்குகிறார்கள் என அமைச்சர் பொன்முடி காட்டமாக பேசியுள்ளார்.

திமுக முப்பெரும் விழா கடந்த 17ஆம் தேதி விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே முப்பெரும் விழாவை அமைச்சர்களும் எம்பிக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக அம்பத்தூர் சட்டசபை தொகுதி சார்பில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, பொன்முடி, எம்பி டி.ஆர். பாலு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு.. அண்ணாமலை கடிதம்.. தமிழக அரசிடம் அறிக்கை கேட்பு.. மத்திய அமைச்சர் தகவல் பெட்ரோல் குண்டு வீச்சு.. அண்ணாமலை கடிதம்.. தமிழக அரசிடம் அறிக்கை கேட்பு.. மத்திய அமைச்சர் தகவல்

திமுக தலைவர்

திமுக தலைவர்

இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை சென்றார் என்பது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் அண்ணாமலைக்கு இது தெரியவில்லை. அவருக்கு அரசியலும் தெரியவில்லை, வரலாறும் தெரியவில்லை.

உயிரை வாங்குறாங்க

உயிரை வாங்குறாங்க

அப்படிப்பட்டவரை தலைவராக போட்டு நம் உயிரை வாங்குகிறார்கள். கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பிரிவினைகள் ஏற்படுத்தக் கூடாது என்பதைத்தான் பெரியார் வலியுறுத்தினார். ஒரு காலத்தில் கோயில் இருக்கும் தெருக்களிலும் உயர்ந்த ஜாதி மக்கள் இருக்கும் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நடந்து செல்லவே முடியாது.

பெரியார்

பெரியார்

அப்படி ஒரு சம்பவம் தற்போது எங்கேயாவது நடக்குமா, இவை பெரியார் செய்த புரட்சி. இதை யாராலும் மறுக்க முடியாது என பேசியிருந்தார். அது போல் நேற்று முன் தினம் சென்னையில் நடந்த பொது கூட்டத்தில் இந்தி படிக்காமல் ஆங்கிலம் படித்ததால்தான் சுந்தர் பிச்சை சிஇஓ ஆனார். நாங்கள் எப்போதும் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள்.

திராவிட நாடு

திராவிட நாடு

ஆதிக்க சக்தியை எதிர்க்க வண்டும். நமக்கு தேவை முதல்வர் ஸ்டாலினை பயன்படுத்தி திராவிட நாடு ஆட்சியை பின்பற்றி தமிழகத்தை முன்மாதிரியான மாநிலமாக மாற்ற வேண்டும். அது போல் திமுக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இடஒதுக்கீடு பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது என்றார்.

English summary
Minister Ponmudi says TN BJP President Annamalai doesnot know politics or history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X