முடிவுக்கு வரும் கொடநாடு கொலை வழக்கு? சிபிசிஐடி முன் பூங்குன்றன் ஆஜர்! கசியும் முக்கிய தகவல்கள்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், சயான் உள்ளிட்ட பலரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.
அப்போது, பங்களாவில் இருந்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுவரை இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, முக்கிய குற்றவாளியான கனகராஜின் சர்வதேச தொலைபேசி அழைப்பு விவரங்களை Interpol மூலம் பெறுவதற்கு CBCID முயற்சித்து வருகிறார்கள்.
கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி என சொல்லப்படும் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. குற்றவாளிகளின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்காக Interpol-இன் உதவியை நாடியுள்ளனர்.
மேலும், இவ்வழக்கில் கூடுதல் சாட்சிகளையும் விசாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த பூங்குன்றன் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
அவரிடம் பங்களாவில் கொள்ளை போன பொருட்கள் குறித்து விசாரணை நடைபெறலாம் என்றும் தெரிகிறது. ஜெயலலிதா இருந்தவரை எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அமைதியாக அரசியலிலிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஒதுங்கினார்.
தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் இந்த ஆஜர், கொடநாடு வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications