Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூங்குயிலே பூங்குயிலே பாட்டு என்னோடது! வம்புக்கு வந்த நாட்டுப்புற பாடகி! ஆனா.. அங்க தான் ட்விஸ்டே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே பூங்குயிலே பூங்குயிலே என்ற பாடல் பிரபலமாகி வருகிறது. சரிகமப உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாடப்பட்ட இந்த பாடல் தற்போது பல்வேறு யூட்யூபர்களால் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தப் பாடலை பாடியதே நான்தான் எனவும் தனக்கு ராயல்டி தர வேண்டும் என கேட்டு இருக்கிறார் நாட்டுப்புற பாடகி ஒருவர். அதே நேரத்தில் உண்மையில் அது அவருடைய பாடல் இல்லை எனவும், பிரபல இசையமைப்பாளர் ஒருவருடைய உருவாக்கம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த காலங்களில் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சிகள் என்றாலே பிரபல இசை பள்ளியில் பயின்றவர்கள் தான் வருவார்கள். ஆனால் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அந்தோணி தாசன், மூக்குத்தி முருகன், செந்தில் ராஜலட்சுமி, முத்து சிற்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போல சரிகமப நிகழ்ச்சியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய பின்னணியை கொண்ட பாடகர்கள் மேடையற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சினிமா துறையிலும் வாய்ப்பு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடப்பட்ட பூங்குயிலே பூங்குயிலே எத்தனை நாளாய் நான் காத்திருப்பேன் என்ற பாடல் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இருக்கிறது.

Poonguyile Poonguyile Song

பூங்குயிலே பாடல்

மேலும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகி ஒருவர் அந்த பாடலை தனது நிகழ்ச்சியில் பாட தற்போது இன்ஸ்டாகிராம் யூடியூப்-ஐ அந்த பாடல் ஆக்கிரமித்துள்ளது. இதற்கிடையே அந்த பாடல் தன்னுடைய பாடல், அதன் ராயல்டி தன்னிடம் தான் இருக்கிறது என கூறி இருக்கிறார் நாகையைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி ஒருவர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் வசித்து வரும் சீராவட்டம் முத்துலட்சுமி என்பவர் தான் அந்தப் பாடலுக்கு உரிமை கோரி இருக்கிறார்.

நாட்டுப்புற பாடகி

கடந்த 2010 ஆம் ஆண்டு நாகூரில் களத்து மேடும் காசி மேடும் என்ற ஆல்பம் வெளியிடப்பட்டதாகவும், அந்த ஆல்பத்தில் ஒன்பது பாடல்களில் நான் பாடிய பூங்குயிலே பூங்குயிலே பாடலும் உண்டு. 2011 ஆம் ஆண்டு இந்த பாடல் வெளிவந்தது. தற்போது யூட்யூப் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தொலைக்காட்சியில் இந்த பாடலை பாடிய நிலையில் மீண்டும் அது அதிகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ராயல்டி விவகாரம்

என்னுடைய குரலில் உள்ள இந்த பாடலை பலர் தங்களுடைய பாடல் என சொல்லி பாடி வருகிறார்கள். இந்த பாடல் என்னுடையது. இதற்கான ராயல்டியும் என்னிடம் இருக்கிறது. தற்போது மிகவும் வறுமையான நிலையில் வாழும் தனக்கு ராயல்டி வழங்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமா பாடல்

இந்நிலையில், உண்மையில் அந்த பாடல் அவருக்கு சொந்தமானது இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்திருக்கிறது. அது நாட்டுப்புற பாடலும் கிடையாது. அது உண்மையில் ஒரு சினிமா பாடல். 1980 இல் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையமைப்பில் வெளியான சின்ன சின்ன வீடு கட்டி என்ற படத்தில் இடம்பெற்ற பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். ஜானகி மலேசியா வாசுதேவனும் இந்த பாடலை பாடியிருந்தனர்.

சூப்பர் சிங்கர்

இதில் சில வரிகளை மற்றும் மாற்றி விட்டு நாட்டுப்புறப்பாடல் என சிலர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பேசியுள்ளனர். இதை நம்பியே முத்துலட்சுமியும் உரிமை கோரி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சமீபத்தில் தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட் படி ஏறிய நிலையில் தற்போது காலம் காலமாக பாடப்பட்டு வரும் பாடல்களை தங்கள் பாடல் என சில நாட்டுப்புற பாடகர்கள் உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+