Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூர்வீக சொத்தில் மகளுக்கு பங்கு உள்ளதா? தந்தையின் உயிலில் திருமணமான பெண்ணுக்கும் உரிமை உள்ளதா? ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூர்வீக சொத்தில் யாருக்கு முழு உரிமை உள்ளது? தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? திடீரென ஒருவர் இறந்துவிட்டால், இறந்தவர்களின் சொத்துகளை மீட்க முடியுமா? இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இதைபற்றி சுருக்கமாக இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.

பூர்வீக சொத்துகளை மட்டுமே பாகப்பிரிவினை செய்ய இயலும். ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய தனிப்பட்ட சொத்துகளின் பெயரில் எவரும் உரிமை கொண்டாட இயலாது. அவரின் விருப்பப்படி விலைக்கு விற்கலாம். தானமாகவும் தரலாம். யாருக்கும் உயிலாகவும் எழுதலாம்.

will document property shares

மகளுக்கு உரிமை: தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில், வாரிசுகளுக்கு உரிமை உள்ளது. இந்து வாரிசுரிமை சட்டம் 2005ன் படி, தந்தைய சுயமாக சம்பாதித்த சொத்தில், மகனுக்கு உள்ள அதே உரிமை, மகளுக்கும் உள்ளது. திருமணம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, பெண்களுக்கும் பங்கு உள்ளது.

எனவே, 2005 ம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு, மகள் வாரிசாக அதாவது சம வாரிசாக கருதப்படுகிறாள். இப்போது மகளின் திருமணத்திற்கு பிறகும், தந்தைக்கு சொத்தின் வாரிசு உரிமை உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை..
பெண்கள்: அதேபோல, பெண்ணுக்கு விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் வேறொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.

தந்தை உயில் எழுதாதபட்சத்தில், நேரடி வாரிசுகளுக்கு, பாலின வேறுபாடின்றி அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் சம பங்கு உள்ளது. ஆனால் திருமணமான பெண்ணின் அப்பா, தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது. இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி எந்த சிக்கலும் பிற்காலத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், வாழும் காலத்திலேயே, உயில்களை பிரித்து சரியானமுறையில் எழுதிவிடுவது நல்லது..
அதேபோல, எதிர்பாராமல் ஒருவர் இறந்துவிட்டால், அவரது சொத்துக்களை எப்படி மீட்பது என்பதில் பலருக்கு சந்தேகம் இருக்கும்.. எனவே, இறந்தவர்களின் சொத்துகளை எப்படி மீட்பது என்பது பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

இறந்தவரின் சொத்து: இறந்தவர்களுடைய சொத்துகளை மீட்க வேண்டுமானால், வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்ட், அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றை அணுக வேண்டியிருக்கும். அப்படி அணுக வேண்டுமானால், நீங்கள் இறப்பு சான்தழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் இறந்தவரின் கணக்கு விவரங்கள் பற்றியும், தனியான அல்லது ஜாயின்ட் அக்கவுண்ட் உள்ளதா? என்பதை பற்றியெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல, இறந்தவருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது, என்னென்ன கடன்கள் இருக்கின்றன? இந்த கடன்களை திருப்பி செலுத்துவதற்கு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாரிசு சான்றிததழ்: ஒருவேளை, இறந்தவரின் உயில் உங்களிடம் இருந்தால், அதை எளிமையாக சொத்துகளை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், உயில் உங்களிடம் இல்லையென்றால் கோர்ட்டை நாடி, சட்ட வாரிசு சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ்கள் பெற்றபிறகு சொத்துகளின் விவரங்கள், முதலீட்டு விவரங்கள் பற்றி பட்டியல் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, சொத்துகள், வங்கி கணக்குகள், மியூச்சுவல் பண்ட், PF முதலீட்டு விவரங்கள், வங்கி லாக்கர் விவரங்கள், கடன் விவரங்கள், இன்சூரன்ஸ் போன்ற அனைத்திற்குமான ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு, அதற்கு பிறகே உரிமை ளகோரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+