பூவே இளைய பூவே.. ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாடிய பாடல்... நெகிழ்ந்த வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தனது தீர்ப்பின் மூலம் தீர்வினை தந்தவர். சிறுவயதில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள், காதல் வயப்பட்டதால் போக்கோ வழக்கில் சிக்கும் இளைஞர்கள் என பல பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வினை தீர்ப்பில் கூறியிருப்பார். இவரது தமிழ் பற்று, சமூக பிரச்சனை, வலுவான தீர்ப்பு போன்ற விஷயங்களுக்காக பலராலும் பாராட்டப்படுபவர், இவர் பாடல்களும் நன்றாக பாடுவார். அப்படித்தான் பூவே இளைய பூவே பாடலை பாடியிருந்தார். அவர் பாடிய பாடலை நெகிழ்ச்சியுடன் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

வைரமுத்து வெளியிட்ட பதிவில்,
"உயர்நீதிமன்றத்தின்
மாண்பமை நீதியரசர்
ஆனந்த் வெங்கடேஷ்
அவர்களின் ஒப்புதலோடு
இந்தப் பதிவை வெளியிடுகிறேன்

Poove Ilaiya Poove A song sung by High Court Judge Anand Venkatesh Vairamuthu share video

கண்ணால் கண்ட காட்சியை
நம்ப முடியவில்லை என்னால்

ஓர் இசை மேடையில்
நீதியரசர்
என் பாடலைப் பாடுகிற
காட்சி அது

'பூவே இளைய பூவே' என்ற
என் புகழ்பெற்ற பாடலைப்
பெரும்பாலும் சுதி விலகாமலும்
முற்றிலும் தமிழ் பிறழாமலும்
என்பாட்டோடு கரைந்து
ஈடுபாட்டோடு
அவர் பாடிய காணொலி
வியப்பில் ஆழ்த்தியது

"இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது"
என்ற வரியில்
வெயில் காயுது
என்ற சாகித்தியத்தின்மீது
முழுச் சங்கதிபோட
முயன்றிருப்பது
நீதிபதியின் சங்கீதக் காதலுக்குச்
சாட்சியாகிறது

சட்டத்துறை நீதித்துறை
வித்தகர்கள் பலரும்
தமிழ்க் காதலும்
கலைக் காதலும் கொண்டிருந்ததை
வழிவழியாக
வரலாறு காட்டி வருகிறது

இதோ
இந்தத் தலைமுறைக்கு
நீதித்துறையின்
கலை அடையாளங்களுள்
நீதிபதியும் ஒருவர்

காணொலி கண்டு
அவரை அழைத்துப் பேசினேன்

"சின்ன வயதிலிருந்து
தமிழும் இசையும்
கேட்டு வளர்ந்தவன் நான்" என்றார்

எனக்கு மகிழ்ச்சி
உயர்நீதிமன்றத்தின்
உயர் கோபுரத்தில்
ஒரு கலைக்குயில்
கூடுகட்டியிருப்பது

நீங்களும் கேளுங்கள்
நீதிக்குயில் பாடுவதை" இவ்வாறு கூறி வைரமுத்து வீடியோவை வெளியிட்டிருக்கிறார்..


நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் யார்

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 993-இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் வழக்கறிஞராக புகழ் பெற்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியானார். இவர் இளம் சிறார்கள் விவகாரத்தில் மிகுந்த அக்கறை காட்டினார். காதல் விவகாரத்தில் போக்கோ வழக்கில் சிக்கிய இளைஞர்களுக்கு இவரது தீர்ப்புகள் விழிப்புணர்வு தருவதாக அமைந்தது. அதேபோல் முதல் முறை குற்றவாளிகள் விவகாரத்திலும், அவர்கள் மீண்டும் குற்றச்செயல்கள் செய்யாமல் திருந்தி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருடன் இணைந்து மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.

அதேபோல் அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்குகளை தானாக முன்வந்து மறு ஆய்வு வழக்குகளை விசாரித்தார். பல்வேறு வழக்குகளில் இவரது தீர்ப்புகள் பாடமாக வைக்கும் அளவிற்கு அழுத்தமாக இருக்கும். மிகவும் துணிச்சலான நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ், தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, பல்வேறு சமூக பிரச்சனைகளை பற்றி ஆழமாக பேசி விவாதத்திற்கு உள்ளாக்கி உள்ளார். சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் எவ்வித அரசியல் அல்லது அதிகாரச் செல்வாக்கிற்கும் தலைவணங்காத கண்டிப்பான நீதிபதியாவும் திகழ்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+