Power Cut: தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு! இருளில் மூழ்கிய செங்கோட்டையன், ஆதவ் அறைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் அறைகள் இருளில் மூழ்கியுள்ளன. அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில்தான் மின்வெட்டு என்றால் தற்போது தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது போன்ற திடீர் திடீர் மின்வெட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

aadhav arjuna sengottaiyan

இரவு நேரங்களில் மின்வெட்டு

குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் வந்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். என்னதான் மின்சாரத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் மின்வெட்டு பிரச்சினை சரி செய்யப்படும் என கூறினாலும் மின்வெட்டு தொடர்கதையாகி, உழைக்கும் வர்க்கத்தினரையும் ஏழை எளிய மக்களையும் வாட்டி வதைக்கிறது.

மின்பற்றாக்குறை

தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக 4500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக மின்வாரிய டெண்டர் விடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு ஏற்பட்டதால் மின் பிரச்சினை இருப்பதாக சொல்லப்படுகிறது.

மின்வெட்டு

எனினும் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டு காரணமாக அவதியடைவதால் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களுக்குத்தான் இது போல் மின்வெட்டு தொல்லை என பார்த்தால், தவெக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்வுகளிலும் மின்வெட்டு ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது.

தலைமைச் செயலகத்தில் மின்வெட்டு

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறையிலேயே இன்று திடீர் மின்வெட்டு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திடீர் மின்வெட்டால் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் அறைகள் இருளில் மூழ்கின. இவர்கள் இருந்த தளம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.

இந்த திடீர் மின்வெட்டு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை நடந்த மின்வெட்டு சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

இதுவரை நடந்த மின்வெட்டுகள்

தாராபுரத்தில் நடந்த தவெக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்த போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. அது போல் வேலூரில் செங்கோட்டையன் பேசிய போதும், தூத்துக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்ட கூட்டத்திலும், அமைச்சர்கள் நிர்மல் குமார், பெ விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டங்களிலும் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.

சில இடங்களில் ஜெனரேட்டர்கள் இருந்தும் அவை சரிவர வேலை செய்யாததால் மின்வாரிய இணைப்புகளை மட்டும் முழுமையாக நம்பியிருந்த போது மின்தடை ஏற்பட்டது.

அது போல் மதுரையில் ஒரு விழாவில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பெரும்பாலும் இந்த மின்வெட்டுகளை தவெக அரசு ஒப்புக் கொள்வதில்லை, வெறும் 2 வினாடி மின்வெட்டுதான் நடந்தது, டிரான்ஸ்பார்மரில் லைன் மாற்றும் போது நடந்தது, விழா நிகழ்விடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பிரச்சினை என்றே கூறி வந்தனர். இன்று தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு என்பதால் என்ன காரணம் சொல்ல போகிறார்களோ தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+