‛‛சென்னை மக்களே இன்று கவனம்’’..காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
சென்னையில் நாள்தோறும் குறிப்பிட்ட ஏரியாக்களின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பராமரிப்பு பணியின் காரணமாக சில இடங்களில் மின் சேவை துண்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (13.07.2024) சென்னையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (டேன்ஜெட்கோ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலைல, பொன்னேரி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடுங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி அண்ணாசாலை பகுதியில் ஒயிட்ஸ் ரோட்டின் ஒரு பகுதி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஹோட்டல் பகுதி, வாசன் அவென்யு, அண்ணாசாலையின் ஒரு பகதி, ரஹேஜாடவர், ஜிபி ரோடு பகுதி, சத்திய மூர்த்தி பவன், இபி காம்ப்ளக்ஸ், இபி லிங்க் ரோடு, கிளப்ஹவுஸ் ரோடு, சிட்டி டவர், பட்டுலர்ஸ் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யு, கலைக்கல்லூரி, பின்னி ரோடு, விசி ரோடு, ஹோட்டல் காஞ்சி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதேபோல் டிஎல்எப் பகுதி, இந்தியன் வங்கி பாகன் பில்டிங், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி வங்கி, மதுரா வங்கி, ஐஓபி வங்கி, ராணி மெய்யம்மை ஹாஸ்டல், கல்யாண மண்டபம், ஏர் இந்தியா, அப்போலோ மருத்துவமனை, மார்ஷ் ரோடு, மான்டியத் ரோடு, கனரா வங்கி, கன்னிமாரா ஹோட்டல், டேட்டா சென்டர், தாஜ் ஹோட்டல் மற்றும் அண்ணசாலையை சுற்றிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேலும் பொன்னேரி பகுதியை எடுத்து கொண்டால் சிப்காட் 1 முதல் 4 வரை, பஞ்செட்டி, ஒபிஜி, பிர்லா கார்பன், துல்ஷ்யன், வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு, சிப்காட் இண்டஸ்ட்ரிஷ் வளாகம், சிப்காட் பைபாஸ் ரோடு, புதிய ஜிபிடி, கங்கன் தோட்டி, பாபன் குப்பம், சிந்தாலகுப்பம், சித்தாராஜா கண்டிகை, பேத்திகுப்பம், ஏலாவூர், கைலூர் மேடு உள்ளிட்ட இடங்களில் இன்று மின் விநியோகம் இருக்காது.
இதுதவிர கும்மிடிபூண்டி, ,பஜார், வேற்காடு, எந்திமேல்பாக்கம், பேதிகுப்பம், மாபெசி நகர், அத்துப்பாக்கம், மங்காவரம், ரெட்டமலைமேடு, குருவிகரம், நத்தம், கும்மிடிப்பூண்டி டவுன், ஜிஎன்டி ரோடு, ரயில்வே பிரிட்ஜ், பாலகிருஷ்ணாபுரம், ரெட்டம்பேடு மெயின் ரோடு, சோலையம்பாக்கம், தெருவழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மாங்காவரம், குருவியகரம் வில்லேஜ் உள்ளிட்ட இடங்களிலும் மின்சாரம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தடைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications