சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனித்து போட்டியிடுறோம்.. ஜெயிக்கிறோம்.. கேப்டனை முதல்வராக்குறோம்.. ஜஸ்ட் லைக் தட்னு சொன்ன பிரேமலதா

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு : அதிமுக தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் அதிமுகவை மீண்டும் விமர்சித்து பேசியுள்ளார்.

Recommended Video

    காஞ்சிபுரம்:அதிமுக, திமுக தலைக்கு மேல் கத்தி… அதிரடி காட்டிய பிரேமலதா விஜயகாந்த்!

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தேமுதிக பொருளாரும் தேர்தல் மண்டல பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அவர் பேசுகையில் இதுவரை நம்மை வைத்து ஆட்சி அமைத்தவர்கள் எல்லாம் நம்மை மதிக்க மறுக்கிறார்கள். கேப்டன் கை காட்டுபவர்தான் இதுவரை முதல்வராகியுள்ளார்கள்.

    புதிதல்ல

    புதிதல்ல

    இனியும் கேப்டன் சொல்பவர்தான் முதல்வராக முடியும் என்பதுதான் உண்மை. இதை ஆண்ட கட்சிகள் மறுக்க முடியாது. விரைவில் கேப்டனை தேடி வருவார்கள். எனக்கு அரசியலில் பிடிக்காத விஷயம் தேர்தலில் கூட்டணி அமைப்பது. நமக்கு தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதியதில்லை.

    வாழ்வா சாவா

    வாழ்வா சாவா

    கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத புதிய சவாலான தேர்தல் 2021 தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. இந்த தேர்தல் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் வாழ்வா சாவா பிரச்சினை நடந்து வருகிறது.

    70 வயதை நெருங்கிய விஜயகாந்த்

    70 வயதை நெருங்கிய விஜயகாந்த்

    கேப்டன் மீண்டும் சட்டமன்றம் செல்வார். அதில் எந்த மாற்றமுமில்லை. உலகத்தில் உள்ள அனைத்து சிறப்பு மருத்துவர்களையும் அணுகி அவரது உடல்நிலையை பாதுகாத்து வருகிறோம். என் குடும்பத்திற்காக உங்களுக்காக தொண்டனுக்காக கேப்டன் 70 வயதை நெருங்கிவிட்டார்.

    அனைத்து தொகுதிகள்

    அனைத்து தொகுதிகள்

    அவர் துடிப்போடு மக்களுக்காக செயல்பட்ட காலத்தில் அவரை முதல்வராக அமர வைக்காமல் இருந்துவிட்டீர்கள். அதுதான் எங்களுக்கெல்லம் வருத்தமளிக்கிறது. நாம் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டாலும் நாம் 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று கேப்டனை முதல்வராக அமர வைப்பது உறுதி. அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.

    English summary
    DMDK Treasurer Premalatha Vijayakanth again criticised AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X