‘ஒற்றை தலைமை’ ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தம்! மகிழ்ச்சியில் பிரிண்டிங் உரிமையாளர்கள்!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வரும் நிலையில் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் பெரும் புயலாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், கட்சி பொதுச் செயலர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில் அவரது தரப்பினர் உறுதியாக உள்ளனர்.
அதேநேரம் முதல்வர் பதவி, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த நிலையில் இதையும் விட்டுக் கொடுக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்

ஓபிஎஸ் மோதல்
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை; ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை இ.பி.எஸ்-தான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி வற்புறுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்" என்று பரபரப்பு பேட்டி அளித்தது பெரும் விவாதத்தை எழுப்பியது. இது தொடர்பாக தங்களது ஆதரவாளர்களுடம் ஓபிஎஸ்-இபிஎஸ் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

போஸ்டர் யுத்தம்
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவாதம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பலப்பரீட்சைக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தொடர்ந்து போஸ்டர் யுத்தம் நடத்தி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகளுக்குள் போட்டி
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், கட்சிக்கு ஒற்றைத்தலைமையே வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் குரல் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் ஒரே தலைமை என்ற கோரிக்கை வலுவாக இருந்தது.இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதிரும் போட்டி
தமிழகத்தின் பல பகுதிகளில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடங்கள், கட்டி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில், " மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே , ஒற்றை தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வாருங்கள்" என்றும், " தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமை ஓபிஎஸ் தலைமையே" என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

உரிமையாளர்கள் மகிழ்ச்சி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். தமிழகத்தின் முதல்வரே, எதிர்க்கட்சித் தலைவரே, எங்களுக்கு எல்லாம் நீங்கள் தான்" என்று பல வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் . இதன் காரணமாக பல இடங்களிலும் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்து இரு தரப்பு ஆதரவாளர்களும் போஸ்டர்களை ஒட்டி வரும் நிலையில் உரிமையாளர்களும் போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன?












Click it and Unblock the Notifications