எங்க பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டாரு..நாளை 12 முதல் தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்! ஓனர்கள் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு வெற்றி பயண திட்டத்தின் கீழ் மாநகர , நகர, பேருந்துகளிலும் சாதாரண புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அறிவிக்கப்பட்டுள்ளதை போல தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்று திறனாளிகளை இலவசமாக பணிக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக 29 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தனியார் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் மூலம் நாள்தோறும் சுமார் 1.76 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர்.

Private Bus Owners

பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் அரசு பேருந்து சேவையை நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கும் 'விடியல் பயணம்' திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இலவச பேருந்து பயணம்

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழக அரசு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. இதையடுத்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் 'வெற்றி பயணம்' என்ற பெயரில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.

கட்டணமின்றி பயணம்

தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். வெற்றி பயணம் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட பின்னர், மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என அரசு அறிவித்துள்ளது.

வெற்றி பயணம் திட்டம்

இதன் கீழ் மொத்தம் 12,692 அரசு பேருந்துகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், தினசரி சுமார் 84 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ்," தமிழ்நாடு அரசு வெற்றி பயண திட்டத்தில் மாநகர நகர பேருந்துகளிலும் சாதாரண புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டால், தனியார் பேருந்துகள் இயக்கமுடியாத சூழல் உண்டாகும், தனியார் பேருந்து துறை சார்ந்த 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

திடீர் ஸ்ட்ரைக்

நஷ்டத்தை ஈடு செய்ய அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதை போல தனியார் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு நஷ்ட ஈடாக தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்க வேண்டும். கோரிக்கை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக 29 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தனியார் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைக்க உள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+