மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமார் நியமனம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2019ஆம் ஆண்டு எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அங்கு பணிக்காலம் முடியும் முன்னரே அவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பல்கலைக் கழகத்தின் நிர்வாக பணிகளை தற்போது ஒருங்கிணைப்பு குழுவினர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தற்போது தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி நியமிக்கப்பட்டனர். பேராசிரியர்கள் எம்.ராஜேந்திரன், பி.மருதமுத்து ஆகியோர் தேடல் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த குழு, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான 3 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பட்டுவருகிறார். துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கும் சூழலில் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வரும் குமாரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications