குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிய தரவு மேற்கொள்ளப்படும் .. பி.டி.ஆர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிய ஒருங்கிணைந்த தரவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. . நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.

நிதியமைச்சர்
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பி.டி.ஆர். கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தரவு
பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார். குடும்பங்களில் பொருளாதார நிலையை அறிய ஒருங்கிணைந்த தரவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு பி.டி.ஆர் மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

கடன்
அப்போது தமிழ்நாட்டின் நிதிநிலைமை மோசமாக உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பம் மீதும் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் அடியோடு சரிந்துள்ள நிலையில் குடும்பங்களில் பொருளாதார நிலையை அறிய தரவு மேற்கொள்ளப்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு
இதேபோல தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார். தொடர்ந்து பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டு வருகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications